ஒழுங்குமுறை விதிமுறைகளை மீறியதாக ரிசர்வ் வங்கி அபராதம் விதிப்பு!
ஐபிஎல் தொடரிலிருந்து சந்தீப் சர்மா விலகல்!
ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் வேகப் பந்துவீச்சாளர் சந்தீப் சர்மா ஐபிஎல் தொடரிலிருந்து விலகினார்.
மும்பைக்கு எதிரான போட்டியில் களம்காணாத ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் வேகப் பந்துவீச்சாளர் சந்தீப் சர்மா தனது விரலில் ஏற்பட்ட எலும்பு முறிவுக் காரணமாக நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து விலகியுள்ளார்.
நடப்பு சீசனில் சந்தீப் சர்மா 10 போட்டிகளில் விளையாடி 9 விக்கெட்டுகள் எடுத்துள்ளார். இந்த சீசனில் சிறப்பான பந்துவீச்சாக 2 விக்கெட்டுகள் 21 ரன்களை கொடுத்திருந்தார்.
ராஜஸ்தான் அணி இந்த சீசனின் பிளே ஆஃப் சுற்றுக்கான வாய்ப்பில் இருந்து வெளியேறியதும் கவனிக்கத்தக்கது.
மிகவும் அனுபவமிக்க சிறந்த டெத் ஓவர் பந்துவீச்சாளரான இவருக்கு மாற்றாக யாரைத் தேர்ந்தெடுப்பார்கள் என இதுவரை ராஜஸ்தான் நிர்வாகம் அறிவிக்கவில்லை.
இது குறித்து ராஜஸ்தான் ராயல்ஸ் கூறியதாவது:
விரலில் ஏற்பட்ட காயத்தினால் இந்த சீசனிலிருந்து சந்தீப் சர்மா விலகுகிறார். கடைசி போட்டியிலேயே இந்தக் காயத்துடனே விளையாடி அவரது மனவலிமையைக் காட்டினார்.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணி அவர் விரைவில் குணமாகி வரவேண்டுமென வாழ்த்துகிறது.
சந்தீப் சர்மாவுக்குப் பதிலாக மாற்று வீரரை விரைவில் அறிவிக்கும் எனக் கூறியுள்ளது.