ஒழுங்குமுறை விதிமுறைகளை மீறியதாக ரிசர்வ் வங்கி அபராதம் விதிப்பு!
நடிகர் சங்க கட்டட திறப்பு விழா தேதியை அறிவித்த விஷால்!
நடிகர் சங்க கட்டடத்தின் திறப்பு விழா தேதியை விஷால் அறிவித்துள்ளார்.
நடிகர் சங்கங்கத்திற்கான கட்டடம் கட்டும் பணிகள் கடந்த 2019 ஆம் ஆண்டு துவங்கின. ஆனால், துவங்கிய சில மாதங்களிலேயே வங்கிக் கடன் பெறுவது தொடர்பான உள்பட சில சிக்கல்கள் எழுந்ததால் கட்டட உருவாக்கத்தின் பணிகள் பாதிக்கப்பட்டன.
சில மாதங்களுக்கு முன் மீண்டும் ஆரம்பிக்கப்பட்ட பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்தப் புதிய கட்டடத்தில் நடிகர்கள் சங்க அலுவலகங்கள், திரையரங்கம், நடிப்பு பயிற்சி அரங்கங்கள், உடற்பயிற்சி கூடம் என பல்வேறு வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
இந்த நிலையில், பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்துகொண்ட விஷால், “தென்னிந்திய நடிகர் சங்க புதிய கட்டட திறப்பு விழா ஆகஸ்ட்15ம் தேதி நடத்த திட்டமிட்டுள்ளோம். முதலில் நடிகர் சங்க கட்டடம் திறப்புவிழா நடைபெறும். நடிகர் சங்க புதிய கட்டட பணிகள் ஜூலையில் நிறைவடையும். நீங்கள் (துணை நடிகர்கள்) அனைவரும் வர வேண்டும். வாழ்த்த வேண்டும்.
அதன்பிறகுதான் எனது திருமண விழா. அது உங்களுடைய கட்டடம். நடிகர் சங்கம் கட்டடம் மட்டும் அல்ல, ஒட்டுமொத்த சினிமா துறைக்காக கட்டப்பட்ட கட்டடம். அம்மாக்கள், பெரியவர்கள் சிரித்த முகத்துடன் வர வேண்டும். வாசலில் நான் நிற்பேன்” என்றார்.
இதையும் படிக்க: கேன்ஸ் பட விழா நடுவராக பாயல் கபாடியா!