வக்ஃப் திருத்தச் சட்டத்துக்கு எதிராக மேலும் ஒரு மனு: உச்சநீதிமன்றம் ஏற்க மறுப்பு
பஹல்காம் தாக்குதல்: ஜே.டி. வான்ஸ் எச்சரிக்கை
பயங்கரவாதத் தாக்குதலை ஒழிக்க இந்தியாவுக்கு பாகிஸ்தான் ஒத்துழைக்க வேண்டும் என்று அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் கூறியுள்ளார்.
பஹல்காம் தாக்குதல் குறித்து அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் பதில் அளித்ததாவது, இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளுக்கும் இடையேயான ஒரு பரபரப்பான பகுதியில் பதற்றம் நிகழ்வது, கவலையளிக்கிறது.
இந்த இரு நாடுகளிலும் உள்ள எங்கள் நண்பர்களுடன் நாங்கள் தொடர்ந்து தொடர்பில் உள்ளோம். பெரிய போருக்கு வழிவகுக்காத வகையில், பாகிஸ்தானுக்கு இந்தியா பதிலளிக்கும் என்று நம்புகிறோம்.
மேலும், பாகிஸ்தானுடன் பொறுப்புடன், தங்கள் நாட்டில் இருந்து செயல்படும் பயங்கரவாதிகளை அழிக்க இந்தியாவுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று தெரிவித்தார்.
அமெரிக்க துணை அதிபரான ஜே.டி. வான்ஸ், தனது குடும்பத்தினருடன் இந்தியாவுக்கு வருகைதந்த நேரத்தில், ஏப்ரல் 22 ஆம் தேதியில் ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தின் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர்.
இந்த பயங்கரவாதத் தாக்குதலில் 26 பேர் படுகொலை செய்யப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு பல்வேறு நாடுகளும் கண்டனம் தெரிவித்தனர்.