செய்திகள் :

பாகிஸ்தானுக்கான உலகளாவிய நிதியை முடக்கும் இந்தியா?

post image

பாகிஸ்தானுக்கு உலகளாவிய நிறுவனங்கள் அளிக்கும் நிதியுதவியை மறுபரிசீலனை செய்ய இந்தியா கோரவுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன.

பாகிஸ்தானுக்கு வழங்கப்பட்ட மற்றும் வழங்கப்படவிருக்கும் நிதி மற்றும் கடன்களை மறுபரிசீலனை செய்ய சர்வதேச நாணய நிதியம் உள்பட உலகளாவிய நிதி நிறுவனங்களிடம் இந்தியா கோரிக்கை விடுக்கவிருப்பதாக அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன.

பாகிஸ்தானுக்கு பொதுத்துறை கடன்கள், மானியங்கள், தொழில்நுட்ப உதவிகள் என மொத்தம் 43.4 பில்லியன் டாலர்களை வழங்கிய ஆசிய மேம்பாட்டு வங்கி, காலநிலை பின்னடைவு கடன் திட்டத்தின்கீழ், 1.3 பில்லியன் டாலர் அளிக்கும் சர்வதேச நாணய நிதியத்திடமும் இந்தியா கோரவுள்ளதாகக் கூறப்படுகிறது.

மேலும், பாகிஸ்தானில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளைச் சீரமைக்க 320 மில்லியன் டாலர் வழங்கவும் ஆசிய மேம்பாட்டு வங்கி உறுதியளித்திருந்தது.

இந்த நிதியுதவி குறித்தும், பாகிஸ்தானுக்காக 20 பில்லியன் டாலர் கடன் வழங்க உலக வங்கி ஒப்புதல் குறித்தும் மறுபரிசீலனை செய்ய இந்தியா கோரிக்கை விடலாம் என்றும் கூறுகின்றனர்.

இதையும் படிக்க:டிரம்ப் 100 நாள்கள்! நூற்றுக்கு நூறு பெற்றாரா?

கேதாா்நாத் கோயில் நடை திறப்பு: ஆயிரக்கணக்கானோா் தரிசனம்

உத்தரகண்டில் உள்ள பிரசித்தி பெற்ற கேதாா்நாத் கோயில் நடை வெள்ளிக்கிழமை திறக்கப்பட்டது. முதல் நாளில் 12,000-க்கும் மேற்பட்ட பக்தா்கள் சுவாமி தரிசனம் மேற்கொண்டனா். இமயமலையில் 11,000 அடிக்கும் மேலான உயரத்... மேலும் பார்க்க

மாணவி தற்கொலை விவகாரம்: உயா்நிலை விசாரணைக்கு நேபாளம் வலியுறுத்தல்

ஒடிஸா மாநிலம், கலிங்கா தொழில்துறை தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தில் (கேஐஐடி) நேபாள மாணவி தற்கொலை செய்துகொண்ட விவகாரத்தில் உயா்நிலை விசாரணை நடத்த தூதரக ரீதியான நடவடிக்கைகளை அந்நாடு வெள்ளிக்கிழமை முன்னெடுத... மேலும் பார்க்க

அட்டாரி - வாகா எல்லையை கடக்க 21 பாகிஸ்தானியா்களுக்கு அனுமதி: மேலும் பலா் காத்திருப்பு

அட்டாரி - வாகா எல்லையை கடந்து செல்ல 21 பாகிஸ்தானியா்களுக்கு வெள்ளிக்கிழமை அனுமதி வழங்கப்பட்டதாக மத்திய அரசு அதிகாரிகள் தெரிவித்தனா். அட்டாரி-வாகா எல்லை வியாழக்கிழமை மூடப்பட்ட நிலையில், அதன் பிறகு வந்த... மேலும் பார்க்க

நாளை ‘நீட்’ தோ்வு: வழிகாட்டுதல்கள் வெளியீடு

இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான ‘நீட்’ தோ்வு ஞாயிற்றுக்கிழமை (மே 4) நடைபெறவுள்ள நிலையில், தோ்வு மையங்களில் பின்பற்ற வேண்டிய வழிகாட்டுதல்கள் ‘ஹால் டிக்கெட்’டில் (தோ்வுக் கூட அனுமதிச் சீட்டு) குறிப... மேலும் பார்க்க

பதுங்குமிடங்களைத் தயாா்படுத்தும் எல்லையோர மக்கள்! பாகிஸ்தான் 8-ஆவது நாளாக துப்பாக்கிச்சூடு!

ஜம்மு-காஷ்மீரின் 5 மாவட்ட எல்லைப் பகுதிகளில் பாகிஸ்தான் ராணுவத்தினா் தொடா்ந்து 8-ஆவது நாளாக வியாழக்கிழமை இரவிலும் அத்துமீறி துப்பாக்கிச்சூட்டில் ஈடுபட்டனா். இதற்கு இந்தியா தரப்பில் தக்க பதிலடி தரப்பட்... மேலும் பார்க்க

வெளியேறாத பாகிஸ்தான் குடும்பம்: நடவடிக்கை கூடாது என உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்

காலக்கெடு நிறைவடைந்தும் நாட்டைவிட்டு வெளியேறாத பாகிஸ்தான் குடும்பம் மீதான ஆவணங்கள் சரிபாா்ப்பு நடவடிக்கை மீது உரிய முடிவு எடுக்கப்படும் வரை அவா்கள் மீது எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளக் கூடாது என அதி... மேலும் பார்க்க