வக்ஃப் திருத்தச் சட்டத்துக்கு எதிராக மேலும் ஒரு மனு: உச்சநீதிமன்றம் ஏற்க மறுப்பு
Retro: "கனிமா பாட்டு செம மொக்கையா இருந்தது" - ஓப்பனாக பேசிய சந்தோஷ் நாராயணன்; ஷாக் ஆன சூர்யா!
சூர்யா நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளியாகியுள்ள ரெட்ரோ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகியிருக்கிறது.
இந்தப் படத்தின் கண்ணாடிப் பூவே, கனிமா, தி ஒன் பாடல்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன.
ரெட்ரோ திரைப்படத்துக்கான புரொமோஷனின் ஒரு பகுதியாக கார்த்திக் சுப்புராஜ், சூர்யா, சந்தோஷ் நாராயணன் உரையாடல் யூடியூபில் வெளியாகியுள்ளது.
இதில் கனிமா பாடல் உருவாக்கம் குறித்துப் பேசியுள்ளார் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன்.
கனிமா பாடலை ஷூட் செய்யும்போது பாடல் கேவலமாக இருந்தது என்று அவர் கூறியதும் அதற்கு நடிகர் சூர்யாவின் ரியாக்ஷனும் வைரலாகி வருகின்றன.

"கனிமா பாடல் முதல் வடிவத்தில் வேறு மாதிரியாக இருந்திருக்கிறது. கனிமா என்ற வார்த்தையே பாடல் படப்பிடிப்பின்போது கிடையாது... எங்கிருந்து வந்தது என்றே தெரியவில்லை" என்றார் சூர்யா.
மேலும், "ரொம்ப நாளுக்குப் பிறகு என்னுடைய பாடல் ஒன்று அனைத்து மொழிகளிலும் ரீல்ஸாக மாறி மக்கள் கொண்டாடுகின்றனர்" என்றும் சூர்யா குறிப்பிட்டார்.
ரெட்ரோ ஆல்பம் குறித்துப் பேசிய சந்தோஷ் நாராயணன், "பொதுவாக ஒரு ஆல்பத்தில் ஒருபாடல் படத்துடன் தொடர்பற்றதாகிவிடும். 5,6 ஆண்டுகள் கழித்து ரசிகர்களிடம் மெல்ல மெல்லமாக அது வெற்றியடையும். இதற்கு முன்பு அப்படி நடந்திருக்கிறது.
முதல்முறையாக இந்த படத்தில் வரும் பாடல்கள் வெளியிடப்பட்ட உடனேயே மக்களால் கொண்டாடப்பட்டன. இது எனக்கு சர்பிரைசிங்காக இருந்தது.

கனிமாதான் ஒரு சரியான செலபிரேஷன் பாடல். அதன் முந்தைய வெர்ஷன் செம கேவலமா இருந்தது. வொர்க் பண்ணும்போது நல்லா இருந்தது, சூட்டிங் எல்லாம் முடித்தபிறகு போட்டு கேட்டபோது செம மொக்கையாக இருந்தது" எனப் பேசினார்.
அப்போது குறுக்கிட்டுப் பேசிய கார்த்திக் சுப்புராஜ், "கனிமா பாடல் வெளியீட்டுக்காக சந்தோஷிடம் பேசும்போது இப்படித்தான் என்கிட்ட மொக்கையா இருக்குன்னு சொன்னார். '5 நாள் கூட இருந்து ஷூட் பண்ணி, டான்ஸ் எல்லாம் அடிட்டு என்ன மொக்கையா இருக்குன்னு சொல்றீங்கன்னு' கேட்டேன்." என்றார்.
மேலும் கார்த்திக், "எங்களுக்குப் பிடிச்சு இருந்துச்சே எப்படிக் கேவலமா இருக்குன்னு சொல்றீங்க?" எனக் கேட்டார்.
அதற்கு சந்தோஷ், "கேவலமா இருந்துச்சு... எப்படின்னு வர்ணிக்கவா முடியும்" எனக் கேட்டார்.
இவர்களது உரையாடலால் குழம்பிய சூர்யா, "இது என்னங்க தன்னடக்கமா, ஓப்பனா பேசுறாரா? என்ன அவரே கேவலமா இருந்துதுன்னு சொல்றார்" எனக் குழப்பமாகக் கேட்டார்.
பின்னர் அந்த பழைய பாடலை மாற்றிவிட்டு அதே விஷுவலுக்காக கனிமாவை உருவாக்கியது குறித்தும், சந்தோஷ் நாராயணன் இசை குறித்தும் உரையாடினர்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...