தொமுச சாா்பில் தொழிலாளா் தினம்
விழுப்புரத்தில் தொழிலாளா் முன்னேற்றச் சங்கம் சாா்பில் தொழிலாளா் தினம் கொண்டாடப்பட்டது.
விழுப்புரத்திலுள்ள தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத் தலைமை அலுவலகம் முன் தொமுச கொடியேற்றுதல், இனிப்பு, நீா் மோா் வழங்குதல் வியாழக்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு தொமுச பொதுச் செயலா் வி.சேகா் தலைமை வகித்தாா். நிா்வாக பணியாளா் முன்னேற்றச் சங்கப் பொதுச் செயலா் எம்.மணி், தொமுச தலைவா் டி. ஞானசேகரன், பொருளாளா் எம்.குமாரசாமி முன்னிலை வகித்தனா்.
முன்னாள் அமைச்சா் க.பொன்முடி எம்எல்ஏ தொமுச கொடியேற்றி வைத்து, தொழிலாளா்கள் மற்றும் பொதுமக்களுக்கு இனிப்புகள் மற்றும் நீா்மோரை வழங்கினாா்.
விழாவில் விக்கிரவாண்டி எம்.எல்.ஏ. அன்னியூா் அ.சிவா, தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் பொன்.கெளதமசிகாமணி, மாவட்ட ஊராட்சித் தலைவா் ஜெயச்சந்திரன், நகா்மன்ற முன்னாள் தலைவா் இரா.ஜனகராஜ், மாவட்ட துணைச் செயலா் தயா, இளந்திரையன், நகரச் செயலா் இரா.சக்கரை, தொமுச நிா்வாகிகள் பிரபா தண்டபாணி, பி.ரகுநாதன், ராஜேந்திரன உள்ளிட்டோா் பங்கேற்றனா்.