தக் லைஃப் டிரைலர் தேதி!
தக் லைஃப் திரைப்படத்தின் இசை வெளியீட்டுத் தேதி குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
கமல்ஹாசன் - மணிரத்னம் கூட்டணி பல ஆண்டுகளுக்குப் பின் இணையும் திரைப்படம் ‘தக் லைஃப்’. இதில், சிலம்பரசன், த்ரிஷா, நாசர், ஜோஜூ ஜார்ஜ், அசோக் செல்வன், ஐஸ்வர்யா லட்சுமி என பலர் நடித்துள்ளனர். ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார்.
கேங்ஸ்டர் பின்னணியில் உருவாகியுள்ள இந்தப் படத்தின் படப்பிடிப்பு கடந்தாண்டு துவங்கி சென்னை, தில்லி, ரஷியா, பாண்டிச்சேரி உள்ளிட்ட பல பகுதிகளில் நடைபெற்று முடிந்தது.
பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படத்தின் முதல் பாடலான ஜிங்குச்சா பாடலை வெளியிட்டனர். திருமண வீட்டின் பின்னணியில் அமைந்த இப்பாடல் கவனம் பெற்றது.
இந்த நிலையில், படத்தின் இசை வெளியீட்டு விழா வருகிற மே 16 ஆம் தேதி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அன்றே டிரைலரும் வெளியாகும் என்பதால் ரசிகர்களிடம் உற்சாகம் ஏற்பட்டுள்ளது.
இதையும் படிக்க: ரெட்ரோ முதல் நாள் தமிழக வசூல் இவ்வளவா?