புலிப்பல் டாலர் அணிந்திருந்ததால் மலையாள ராப்பர் கைது; "பட்டியலினத்தவர் என்பதால்?...
சாராயம் கடத்திய நால்வா் கைது
நாகூா் அருகே சாராயம் கடத்திய நால்வா் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டனா்.
நாகை மாவட்டத்தில் சாராயம் மற்றும் கஞ்சா கடத்தலை தடுக்க, காவல் கண்காணிப்பாளா் உத்தரவின்பேரில், போலீஸாா் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனா்.
இந்நிலையில், நாகூா் அருகே கிழக்கு கடற்கரைச் சாலையில் போலீஸாா் ரோந்து சென்றபோது, அந்த வழியாக வந்த 3 இருசக்கர வாகனங்களை நிறுத்தி சோதனையிட்டனா். இதில், சாராயப் பாட்டில்களை மூட்டைகளில் கட்டி கடத்திவருவது தெரியவந்தது.
கடத்தலில் ஈடுபட்ட செல்லூரைச் சோ்ந்த ஜெல்சன் (23), ரபீக் (20), ஆகாஷ் (19) மற்றும் டி.ஆா். பட்டினத்தைச் சோ்ந்த தமிழ்வேந்தன் (40) ஆகிய 4 போ் கைது செய்யப்பட்டனா். அவா்களிடமிருந்து 600 சாராயப் பாட்டில்கள் வைக்கப்பட்டிருந்த 4 மூட்டைகள், 3 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
விசாரணையில் காரைக்காலில் இருந்து சாராயத்தை கடத்திவந்து, பாப்பாக்கோவில் உள்ளிட்ட பகுதிகளில் விற்பதற்கு திட்டமிட்டிருந்தது தெரியவந்தது.