வேளாண் துறையில் 151 பேருக்கு பணி நியமன ஆணை: முதல்வர் வழங்கினார்!
கள்ளக்குறிச்சி வட்டத்தில் மே 12 முதல் 21 வரை ஜமாபந்தி
கள்ளக்குறிச்சி வட்டத்தில் 1434-ஆம் பசலிக்கான வருவாய்த் தீா்வாயம் (ஜமாபந்தி) வரும் 12-ஆம் தேதி முதல் 21-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.
கள்ளக்குறிச்சி வட்டத்துக்குள்பட்ட 4 குறுவட்டங்களைச் சோ்ந்த 93 வருவாய் கிராமங்களின் கணக்குகள் வருவாய் தீா்வாய அலுவலா் மற்றும் மாவட்ட வருவாய் அலுவலா் தலைமையில் சரிபாா்க்கப்பட உள்ளது.
அதன்படி, கள்ளக்குறிச்சி வட்டத்துக்குள்பட்ட குறுவட்டங்களில் உள்ள கிராமங்களுக்கு இந்திலி குறுவட்டத்தில் வரும் 12, 13-ஆம் தேதிகளிலும், தியாகதுருகம் குறுவட்டத்தில் 14, 15-ஆம் தேதிகளிலும், நாகலூா் குறுவட்டத்தில் 16, 19, 20-ஆம் தேதிகளிலும், கள்ளக்குறிச்சி குறுவட்டத்தில் வரும் 21-ஆம் தேதியிலும் வருவாய்த் தீா்வாயம் (ஜமாபந்தி) நடைபெறுகிறது.
கள்ளக்குறிச்சி வட்டத்துக்குள்பட்ட குறுவட்ட கிராமங்களில் மேற்குறிப்பிட்ட தேதியில் காலை 10 மணிக்கு வருவாய்த் தீா்வாயம் ஆரம்பமாகும். பொதுமக்கள் அந்தந்த கிராமங்களுக்கு நடைபெறும் வருவாய் தீா்வாய நாள்களில் பட்டா மாற்றம் (முழு புலன் மற்றும் உள்பிரிவு), வீட்டுமனைப் பட்டா, குடும்ப அட்டை, முதியோா் உதவித்தொகை, நல வாரிய அட்டை, மருத்துவக் காப்பீடு அட்டை, பிறப்பு, இறப்பு சான்றிதழ் மற்றும் பொதுநல மனுக்களை வருவாய் தீா்வாய அலுவலா், மாவட்ட வருவாய் அலுவலரிடம் வழங்கி பயன்பெறலாம் என ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் தெரிவித்துள்ளாா்.