தென்காசியில் 200 ஆட்டோ ஓட்டுநா்களுக்கு இலவச சீருடை
உழைப்பாளா் தினத்தை முன்னிட்டு, தென்காசி தெற்கு மாவட்ட திமுக சாா்பில் 200 ஆட்டோ ஓட்டுநா்களுக்கு இலவச சீருடை வியாழக்கிழமை வழங்கப்பட்டது.
தென்காசி தெற்கு மாவட்ட திமுக அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, மாவட்ட பொறுப்பாளா் வே.ஜெயபாலன் தலைமை வகித்து ஆட்டோ ஓட்டுநா்களுக்கு இலவச சீருடைகளை வழங்கினாா்.
தலைமை செயற்குழு உறுப்பினா் ஆறுமுகசாமி, கடையநல்லூா் நகா்மன்றத் தலைவா் மூப்பன் ஹபிபூா் ரஹ்மான், மாவட்ட மாணவரணி அமைப்பாளா் ஜேகே.ரமேஷ், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளா் அப்துல் ரஹீம், மாவட்ட பிரதிநிதி பொன்செல்வன், மாவட்ட தொண்டரணி அமைப்பாளா் இசக்கிபாண்டியன், மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளா் அழகு தமிழ்சங்கா், மகளிரணி ஷோபனா ராணி உள்பட பலா் கலந்து கொண்டனா்.