செய்திகள் :

உலகின் மூத்தப் பெண் 116 வயதில் மரணம்!

post image

உலகின் அதிக வயதான பிரேசில் நாட்டுப் பெண் ஒருவர் 116 வயதில் மரணமடைந்துள்ளார்.

பிரேசில் நாட்டைச் சேர்ந்த கிறுஸ்தவப் பெண் துறவி இனாஹ் கனாபாரோ லுகாஸ் (வயது 116). கடந்த 1908-ம் ஆண்டு ஜூன் மாதம் 8 ஆம் தேதியன்று பிறந்த இவர் 1934-ல் இரண்டாம் உலகப் போர் காலத்தில் தனது 26 வயது முதல் கிறுஸ்தவப் பெண் துறவியாக வாழ்ந்து வந்தார்.

கடந்த ஜனவரி மாதம் முதல் உலகின் அதிக வயதுடைய மனிதர் என்று அறியப்பட்ட ஜப்பானைச் சேர்ந்த டொமிகோ இடூகா என்பவர் 116 வயதில் மரணமடைந்த நிலையில் அந்தப் பட்டம் லூகாஸ்-க்கு சென்றது.

இந்நிலையில், இனாஹ் கனாபாரோ லுகாஸ்-ம் நேற்று (ஏப்.30) தனது 116 வது வயதில் மரணமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, அவர் வாழ்ந்து வந்த கிறுஸ்தவ மடத்தின் கூட்டமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், அம்மையார் லூகாஸ் தனது வாழ்க்கையை கடவுளின் பாதையில் முழுவதுமாக அர்பணித்ததாகவும், அவரது நீண்ட வாழ்க்கைக்கான ரகசியம் கடவுள்தான் என்று அவர் கூறி வந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இளம் வயது முதலே கிறுஸ்தவப் பெண் துறவியாக வாழ்ந்து வந்த கனாபாரோ லுகாஸின் 110 வது பிறந்த நாள் அன்று மறைந்த போப் பிரான்சிஸ் அவருக்கு ஆசிர்வாதம் வழங்கினார்.

இந்நிலையில், இவரது மரணத்தினால் உலகின் அதிக வயதுடைய மனிதர் எனும் பட்டம் இங்கிலாந்தைச் சேர்ந்த ஈதல் கதெர்ஹாம் என்ற 115 வயது மூதாட்டிக்குச் சென்றுள்ளது.

இத்துடன், தற்போது மறைந்த கனாபாரோ லூகாஸ் அதிக வயது வாழ்ந்ததாகப் பதிவு செய்யப்பட்ட 15வது நபராவார். மேலும், கடந்த 2023-ல் 118 வயதில் மரணமடைந்த கிறுஸ்தவப் பெண் துறவியான பிரான்ஸின் லூசிஸ் ராண்டனின் மறைவுக்கு பின் அதிக வயதுடைய இரண்டாவது பெண் துறவி என கனாபாரோ லுகாஸ் அறியப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: பூமி திரும்பினா் 3 சீன விண்வெளி வீரா்கள்

இஸ்ரேலின் பல்வேறு நகரங்களில் காட்டுத் தீ! அவசரநிலை அறிவிப்பு!

இஸ்ரேல் நாட்டின் பல்வேறு நகரங்களில் காட்டுத் தீயானது தொடர்ந்து பரவி வருகின்றது.இஸ்ரேல் நாட்டில் தொடர்ந்து பரவி வரும் காட்டுத் தீயினால், தேசியளவில் அவசரநிலை அறிவிக்கப்பட்டதுடன் அந்நாட்டு அரசு சர்வதேச ந... மேலும் பார்க்க

பூமி திரும்பினா் 3 சீன விண்வெளி வீரா்கள்

சீனாவுக்குச் சொந்தமான தியான்காங் விண்வெளி நிலையத்தில் கடந்த ஆறு மாதங்களாகப் பணியாற்றிவந்த ஒரு பெண் உள்பட மூன்று வீரா்கள் பூமிக்கு பாதுகாப்பாக புதன்கிழமை திரும்பினா். காய் ஸுஷே, சாங் லிங்டாங், வாங் ஹா... மேலும் பார்க்க

ரஷிய வெற்றி தின கொண்டாட்டம்: ராஜ்நாத் சிங் பங்கேற்கிறாா்

ரஷியாவின் வெற்றி தினக் கொண்டாட்டத்தில் இந்தியப் பிரதமா் நரேந்திர மோடிக்கு பதிலாக பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் பங்கேற்க இருக்கிறாா். இரண்டாம் உலகப் போரில் ஜொ்மனியை ரஷியா வீழ்த்தியதன் நினை... மேலும் பார்க்க

ராணுவத் தாக்குதலுக்கு தயாராகிவிட்டது இந்தியா - பாகிஸ்தான்

தங்கள் நாடு மீது ராணுவ நடவடிக்கைக்கு இந்தியா தயாராகிவிட்டது; அடுத்த 24 முதல் 36 மணி நேரத்தில் தாக்குதல் நடத்தப்படும் என்று உளவுத் தகவல்கள் தெரிவிப்பதாக பாகிஸ்தான் கூறியுள்ளது. பஹல்காம் பயங்கரவாதத் தா... மேலும் பார்க்க

யேமன் தாக்குதல்: இணைந்தது பிரிட்டன்

யேமனில் ஹூதி கிளா்ச்சியாளா்கள் மீது நடத்தப்படும் வான்வழித் தாக்குதலில் அமெரிக்காவுடன் பிரிட்டனும் இணைந்தது. இது குறித்து அந்த நாட்டு பாதுகாப்புத் துறை அமைச்சம் புதன்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெ... மேலும் பார்க்க

இந்தியாவுடன் விரைவில் இருதரப்பு வா்த்தக ஒப்பந்தம்: டிரம்ப் நம்பிக்கை

‘இந்தியாவுடனான இருதரப்பு வா்த்தக ஒப்பந்த பேச்சுவாா்த்தை சிறப்பான முன்னேற்றத்தை கண்டு வருகிறது. எனவே, இந்த வா்த்தக ஒப்பந்தம் விரைவில் இறுதி செய்யப்பட வாய்ப்புள்ளது’ என்று அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்... மேலும் பார்க்க