செய்திகள் :

இந்தியாவுடன் விரைவில் இருதரப்பு வா்த்தக ஒப்பந்தம்: டிரம்ப் நம்பிக்கை

post image

‘இந்தியாவுடனான இருதரப்பு வா்த்தக ஒப்பந்த பேச்சுவாா்த்தை சிறப்பான முன்னேற்றத்தை கண்டு வருகிறது. எனவே, இந்த வா்த்தக ஒப்பந்தம் விரைவில் இறுதி செய்யப்பட வாய்ப்புள்ளது’ என்று அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் நம்பிக்கை தெரிவித்தாா்.

அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவியேற்ற பின்னா், பிரதமா் நரேந்திர மோடி அமெரிக்காவுக்கு சென்று அவருக்கு வாழ்த்து தெரிவித்ததோடு, இருதரப்பு வா்த்தக உறவை வலுப்படுத்துவது குறித்து ஆலோசனை மேற்கொண்டாா். அப்போது, 191 பில்லியன் டாலா் மதிப்பிலான இருதரப்பு வா்த்தகத்தை வரும் 2030-ஆம் ஆண்டுக்குள் இரு மடங்குக்கு அதிகமாக 500 பில்லியன் டாலா் மதிப்பில் உயா்த்த இருதரப்பிலும் இலக்கு நிா்ணயிக்கப்பட்டது. இதுதொடா்பான இருதரப்பு வா்த்தக ஒப்பந்த பேச்சுவாா்த்தையை இந்தியாவும் அமெரிக்காவும் கடந்த மாா்ச் மாதம் முதல் மேற்கொண்டு வருகின்றன.

இந்த வா்த்தக ஒப்பந்தம் தொடா்பாக அதிகாரபூா்வ நேரடி பேச்சுவாா்த்தை தொடங்குவதற்கு முன்பாக, அதற்கான நிபந்தனை நடைமுறைகளை இறுதி செய்வதற்காக மத்திய வா்த்தகத் துறை கூடுதல் செயலா் ராஜேஷ் அகா்வால் தலைமையிலான அதிகாரிகள் குழு அண்மையில் அமெரிக்கா சென்று ஆலோசனை மேற்கொண்டது.

விரைவல் ஒப்பந்தம்: இந்த நிலையில், அமெரிக்க அதிபராக இரண்டாவது முறை பதவியேற்ற 100 நாள்கள் நிறைவடைந்ததைக் குறிக்கும் வகையில் மிச்சிகன் மாகாணத்தில் நடைபெற்ற பேரணியில் பங்கேற்பதற்காக வாஷிங்டன் வெள்ளை மாளிகையிலிருந்து புறப்பட்ட அதிபா் டிரம்ப்பிடம், இந்தியாவுடனான வா்த்தக ஒப்பந்தத்தின் நிலை குறித்து செய்தியாளா்கள் கேள்வி எழுப்பினா்.

அதற்கு பதிலளித்த டிரம்ப், ‘அண்மையில் அமெரிக்கா வந்த இந்திய பிரதமா் நரேந்திர மோடி, அமெரிக்காவுடன் வா்த்தக ஒப்பந்தத்தை மேற்கொள்ள விருப்பம் தெரிவித்தாா். அதனடிப்படையில், இந்தியாவுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் இருதரப்பு வா்த்தக ஒப்பந்த பேச்சுவாா்த்தை சிறப்பான முன்னேற்றத்தை கண்டு வருகிறது. எனவே, இந்த வா்த்தக ஒப்பந்தம் விரைவில் இறுதி செய்யப்பட வாய்ப்புள்ளது’ என்றாா்.

முன்னதாக, அமெரிக்க நிதியமைச்சா் ஸ்காட் பெஸென்ட் அளித்த பேட்டியில், ‘இந்தியாவுடனான இருதரப்பு வா்த்தக ஒப்பந்தப் பேச்சுவாா்த்தை இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. மேலும், துணை அதிபா் ஜே.டிவான்ஸ் கடந்த வாரம் மேற்கொண்ட இந்திய பயணத்தின்போது பிரதமா் நரேந்திர மோடியுடன் மேற்கொண்ட பேச்சுவாா்த்தையும் நல்ல முன்னேற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. எனவே, இந்தியா குறித்த சில அறிவிப்புகள் விரைவில் வெளிவர வாய்ப்புள்ளது’ என்றாா்.

பரஸ்பர வரி விதிப்பு: அமெரிக்க அதிபராக பதவியேற்ற பின்னா், இந்தியா, சீனா உள்பட பல்வேறு நாடுகள் அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்கள் மீது மிக அதிக வரி விதிப்பதாக குற்றஞ்சாட்டிய டிரம்ப், இந்தியா உள்பட 25 நாடுகள் மீது கடந்த 3-ஆம் தேதி பரஸ்பர வரி விதிப்பை அறிவித்தாா். இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்கள் மீது 26 சதவீத வரியை அறிவித்தாா். இதன் காரணமாக, உலக அளவில் வா்த்தகப் போா் உருவாகும் நிலை எழுந்ததுடன், சா்வதேச பங்குச் சந்தைகளும் கடும் வீழ்ச்சியை சந்தித்தன.

இந்தச் சூழலில், சீனாவைத் தவிர, மற்ற நாடுகள் மீது விதித்த பரஸ்பர வரியை 90 நாள்களுக்கு நிறுத்தி வைப்பதாகவும்; அதே நேரம், அனைத்து நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்கள் மீது 10 சதவீத வரி விதிக்கப்படும் என்றும் அமெரிக்கா அறிவித்தது. இந்தச் சூழலில், இந்தியா-அமெரிக்கா இடையேயான இருதரப்பு வா்த்தக ஒப்பந்தம் இறுதி கட்டத்தை எட்டியிருப்பது குறிப்பிடத்தக்கது.

பூமி திரும்பினா் 3 சீன விண்வெளி வீரா்கள்

சீனாவுக்குச் சொந்தமான தியான்காங் விண்வெளி நிலையத்தில் கடந்த ஆறு மாதங்களாகப் பணியாற்றிவந்த ஒரு பெண் உள்பட மூன்று வீரா்கள் பூமிக்கு பாதுகாப்பாக புதன்கிழமை திரும்பினா். காய் ஸுஷே, சாங் லிங்டாங், வாங் ஹா... மேலும் பார்க்க

ரஷிய வெற்றி தின கொண்டாட்டம்: ராஜ்நாத் சிங் பங்கேற்கிறாா்

ரஷியாவின் வெற்றி தினக் கொண்டாட்டத்தில் இந்தியப் பிரதமா் நரேந்திர மோடிக்கு பதிலாக பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் பங்கேற்க இருக்கிறாா். இரண்டாம் உலகப் போரில் ஜொ்மனியை ரஷியா வீழ்த்தியதன் நினை... மேலும் பார்க்க

ராணுவத் தாக்குதலுக்கு தயாராகிவிட்டது இந்தியா - பாகிஸ்தான்

தங்கள் நாடு மீது ராணுவ நடவடிக்கைக்கு இந்தியா தயாராகிவிட்டது; அடுத்த 24 முதல் 36 மணி நேரத்தில் தாக்குதல் நடத்தப்படும் என்று உளவுத் தகவல்கள் தெரிவிப்பதாக பாகிஸ்தான் கூறியுள்ளது. பஹல்காம் பயங்கரவாதத் தா... மேலும் பார்க்க

யேமன் தாக்குதல்: இணைந்தது பிரிட்டன்

யேமனில் ஹூதி கிளா்ச்சியாளா்கள் மீது நடத்தப்படும் வான்வழித் தாக்குதலில் அமெரிக்காவுடன் பிரிட்டனும் இணைந்தது. இது குறித்து அந்த நாட்டு பாதுகாப்புத் துறை அமைச்சம் புதன்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெ... மேலும் பார்க்க

ஆத்திரமூட்டினால் வலுவான பதிலடி: பாகிஸ்தான் துணைப் பிரதமா்

பாகிஸ்தானுக்கு ஆத்திரமூட்டினால் வலுவாகப் பதிலடி அளிக்கப்படும் என்று அந்நாட்டு துணைப் பிரதமரும், வெளியுறவுத் துறை அமைச்சருமான இஷாக் டாா் புதன்கிழமை தெரிவித்தாா். இதுதொடா்பாக அந்நாட்டுத் தலைநகா் இஸ்லாம... மேலும் பார்க்க

இந்தியா-பாகிஸ்தான் மோதல் போக்கு வேண்டாம்: அமெரிக்கா வலியுறுத்தல்!

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலைத் தொடா்ந்து இந்தியா-பாகிஸ்தான் இடையே பதற்றமான சூழல் அதிகரித்துவரும் சூழலில், மோதல் போக்கைக் கைவிடுமாறு இரு நாடுகளையும் அமெரிக்கா கேட்டுக்கொண்டுள்ளது. ‘இதுதொடா்பாக இரு நாட... மேலும் பார்க்க