செய்திகள் :

அவிநாசிலிங்கேஸ்வரர் கோயில் தேர்த் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

post image

அவிநாசி: அவிநாசிலிங்கேஸ்வரர் கோயில் சித்திரைத் தேர்த் திருவிழா கொடியேற்றத்துடன் வியாழக்கிழமை தொடங்கியது.

கொங்கு மண்டலத்தின் ஏழு சிவஸ்தலங்களுள் முதன்மை பெற்றதும், முதலை விழுங்கிய சிறுவனை சுந்தரமூர்த்தி நாயனார், தேவார திருப்பதிகம் பாடி மீண்டும் உயிர்ப்பித்து எழச்செய்த திருத்தலமாகவும் கருணாம்பிகையம்மன் உடனமர் அவிநாசிலிங்கேஸ்வரர் கோயில் திருத்தலம் விளங்குகிறது.

இக்கோயிலில் ஆண்டுதோறும் சித்திரைத் தேர்த் திருவிழா கோலாகலமாக நடைபெறுவது வழக்கம்.

அதன்படி, இந்த ஆண்டு தேர்த்திருவிழா வேத பாராயணம், பஞ்ச வாத்தியம் முழங்க கொடியேற்றத்துடன் வியாழக்கிழமை கோலாகலமாக தொடங்கியது.

கொடியேற்றத்தை ஒட்டி, விநாயகர், சோமாஸ்கந்தர், சுப்பிரமணியர், கருணாம்பிகையம்மன், சண்டிகேஸ்வரர் ஆகிய பஞ்சமூர்த்திகளுக்கு அபிஷேகம், அலங்காரம், மகா தீபாராதனைகள் நடைபெற்றன.

இதையடுத்து அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.

திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் கோவிலில் சித்திரை பிரமோற்சவம் கொடியேற்றத்துடன் தொடக்கம்!
அவிநாசிலிங்கேஸ்வரர் கோயில் சித்திரைத் தேர்த் திருவிழா கொடியேற்றப்பட்டதும் மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து 2-ஆம் தேதி மாலை சூரிய, சந்தர மண்டல காட்சி, 3-ஆம் தேதி அதிகார நந்தி, கிளி, பூதம் அன்னபச்சி வாகன காட்சிகள், 4-ஆம் தேதி புஷ்ப பல்லக்கு நடைபெற உள்ளது.

5-ஆம் தேதி இரவு பஞ்சமூர்த்திகள் புறப்பாடு, 63 நாயன்மார்களுக்கு காட்சியளித்தல், கரிவரதராஜப் பெருமாள் கோயில் கொடியேற்றம் ஆகியவை நடைபெற உள்ளன. 6-ஆம் தேதி இரவு கற்பகவிருட்சம், சுவாமி திருக்கல்யாணம் ஆகியவை நடைபெற உள்ளன.

7-ஆம் தேதி காலை 6 மணிக்கு பஞ்சமூர்த்திகள் திருத்தேரில் எழுந்தருளல் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

முக்கிய நிகழ்வான தேரோட்டம் மே 8-ஆம் தேதி காலை தொடங்கி, வடக்கு ரத வீதியில் தேர் நிறுத்தப்படும். 9-ஆம் தேதி காலை 8 மணிக்கு திருத்தேர் வடம் பிடித்தல், தேர் நிலை சேறுதல் நிகழ்ச்சி நடைபெறற உள்ளது. 10- ஆம் தேதி காலை 8 மணிக்கு கருணாம்பிகையம்மன், சுப்பிரமணியர், சண்டிகேஸ்வரர், கரிவரதராஜப் பெருமாள் திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடைபெறுகிறது. 11-ஆம் தேதி பரிவேட்டை, 12-ஆம் தேதி இரவு தெப்பத் தேர் உற்சவம், 13-ஆம் தேதி நடராஜப் பெருமான் மகா தரிசனம், 14-ஆம் தேதி மஞ்சள் நீர், இரவு மயில் வாகனக்காட்சியுடன் விழா நிறைவு பெறுகிறது.

திருவள்ளூர்-ஸ்ரீபெரும்புதூர் ஆறுவழிச் சாலை பணி: துணை முதல்வர் உதயநிதி தொடங்கி வைத்தார்

திருவள்ளூர்: திருவள்ளூர் புறவழிச்சாலை முதல் ஸ்ரீபெரும்புதூர் வரையிலான 30.10 கி.மீ நீளத்துக்கான ஆறுவழிச் சாலை திட்டப்பணிகளை வியாழக்கிழமை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.சென்னை எல்லை சால... மேலும் பார்க்க

மதுரைக்கு வரும் விஜய், பேரணி நடத்தினால் நடவடிக்கை: காவல் ஆணையர் எச்சரிக்கை!

தவெக தலைவர் விஜய் இன்று மாலை மதுரை விமான நிலையம் வரவுள்ள நிலையில், இன்று காலை முதலே தொண்டர்கள் குவிந்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தவெக தலைவர் விஜய் படப்பிடிப்புக்காக இன்று(வியாழக்கிழமை) கொடைக்கான... மேலும் பார்க்க

கிராமசபை கூட்டத்தை புறக்கணித்து கருப்புக் கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம்

சிதம்பரம்: சிதம்பரம் அருகே சிலுவைபுரம் கிராம மக்கள், தங்களது பகுதியை தனி ஊராட்சியாக அறிவிக்கக் கோரி கிராம சபை கூட்டத்தை புறக்கணித்து கருப்புக் கொடி ஏந்தி வியாழக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.கடலூர... மேலும் பார்க்க

கோவை விமான நிலையத்தில் 500 கார்களை நிறுத்தும்வகையில் பார்க்கிங் மையம்!

கோவை விமான நிலையத்தில் 524 கார்களை நிறுத்தும் வகையில் புதிய பார்க்கிங் மையம் அமைக்கப்பட இருக்கிறது. கோவை விமான நிலையத்தில் இருந்து தினமும் 30 விமானங்கள் இயக்கப்படுகின்றன. இதன் மூலம் 10,000 உள்நாட்டுப்... மேலும் பார்க்க

உழைக்கும் மக்களின் ஒற்றுமை வெல்லட்டும்!: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்!

உழைப்பாளர்களின் உற்றத் தோழனாக நம் திராவிட மாடல் அரசு என்றும் அவர்களுடன் கரம் கோத்து நிற்கும். உழைக்கும் மக்களின் ஒற்றுமை வெல்லட்டும் என துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். உலகின் பல்வேறு ... மேலும் பார்க்க

பள்ளிகள் திறப்பு தேதியில் மாற்றம் வருமா? - அமைச்சர் அன்பில் மகேஸ் பதில்!

கோடை விடுமுறை முடிந்து வெயிலைப் பொருத்து பள்ளிகள் திறப்பு குறித்து முடிவு செய்யப்படும் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் கூறியுள்ளார். மேலும் தனியார் பள்ளிகள் கூடுதல் கட்டணம் வசூலித்தால் ந... மேலும் பார்க்க