ஐபிஎல் தொடரிலிருந்து விக்னேஷ் புதூர் விலகல்: மாற்று வீரர் அறிவிப்பு!
கோவை விமான நிலையத்தில் 500 கார்களை நிறுத்தும்வகையில் பார்க்கிங் மையம்!
கோவை விமான நிலையத்தில் 524 கார்களை நிறுத்தும் வகையில் புதிய பார்க்கிங் மையம் அமைக்கப்பட இருக்கிறது.
கோவை விமான நிலையத்தில் இருந்து தினமும் 30 விமானங்கள் இயக்கப்படுகின்றன. இதன் மூலம் 10,000 உள்நாட்டுப் பயணிகளும், 1,000 வெளிநாட்டுப் பயணிகளும் பயணம் செய்கிறார்கள்.
விமான நிலைய விரிவாக்கத்துக்காக ரூ. 1,100 கோடியில் நிலம் கையகப்படுத்தும் பணி முடிவுற்றது. இதைத் தொடர்ந்து ரூ. 2,000 கோடி மதிப்பில் விமான நிலையத்தை விரிவாக்கம் செய்ய விமான நிலைய ஆணையரகம் நடவடிக்கை எடுத்து வருகிறது. தற்பொழுது ஓடுதளம் 2,900 மீட்டர் ஆக உள்ளது. இதனை மேலும் 450 மீட்டர் நீளத்துக்கு நீட்டிக்கவும் பயணிகளுக்கான அடிப்படை வசதி என பல்வேறு வசதிகள் செய்யப்பட்டு வருகின்றன.
இந்தப் பணிகள் அனைத்தும் 2031 ஆம் ஆண்டுக்குள் முடிவடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போதுள்ள பழைய குடியிருப்புப் பகுதிகளை அகற்றி, அங்கு கார் பார்க்கிங் வசதி மேற்கொள்ளப்பட உள்ளது. மொத்தம் 524 கார்களை நிறுத்தும் வகையில் பார்க்கிங் மையம் அமைக்க விமான நிலைய ஆணையரகம் ஒப்பந்தம் கோரியுள்ளது.
இந்தப் பணிகள் முடிவடைந்ததும், தற்பொழுது உள்ள பார்க்கிங் இடத்தில் சில மேம்பாட்டு நடவடிக்கைகள் நடைபெற உள்ளதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதுகுறித்து விமான நிலையப் பயணிகள் நலச் சங்கத்தினர் கூறும்போது, தற்பொழுது ஒரு மணி நேரத்துக்கு 4 விமானங்கள் கையாளப்பட்டு வருகிறது. தற்பொழுது இருக்கும் வசதியை கொண்டு மேலும் ஒரு டெர்மினல் கட்டடம் கட்டி ஒரு மணி நேரத்துக்கு கூடுதலாக 4 விமானங்களை கையாளும் வசதி செய்யப்பட வேண்டும். அப்பொழுதுதான் பயணிகளுக்கான வாய்ப்புகள் அதிகரிக்கும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளனர்.