திராவிடர்கள் என்றாலே தொழிலாளர்கள்தான்: முதல்வர் மு.க.ஸ்டாலின்
கிராமசபை கூட்டத்தை புறக்கணித்து கருப்புக் கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம்
சிதம்பரம்: சிதம்பரம் அருகே சிலுவைபுரம் கிராம மக்கள், தங்களது பகுதியை தனி ஊராட்சியாக அறிவிக்கக் கோரி கிராம சபை கூட்டத்தை புறக்கணித்து கருப்புக் கொடி ஏந்தி வியாழக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கடலூர் மாவட்டம், சிதம்பரம் கீரப்பாளையம் ஒன்றியம் சிலுவைபுரம் கிராமத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த கிராமம் மக்கள் சி.மேலவன்னியூர் ஊராட்சியிலும், லால்புரம் ஊராட்சி மற்றும் வயலூர் ஊராட்சி பகுதிகளிலும் வசித்து வருகின்றனர். இதனால் அவர்களுக்கு எந்த அடிப்படை வசதியோ, அரசின் நலத்திட்ட உதவிகளை பெற முடியவில்லை என கூறப்படுகிறது.
உழைக்கும் மக்களின் ஒற்றுமை வெல்லட்டும்!: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்!
இதையடுத்து சிலுவைபுரத்தை தனி ஊராட்சியாக அறிவிக்கக் கோரி பல்வேறு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், சிலுவைபுரம் கிராம மக்கள் மே.1 ஆம் தேதி நடைபெற்ற கிராமசபை கூட்டத்தை புறக்கணித்து கருப்புக் கொடி ஏந்தி கவன ஈர்ப்பு ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.