செய்திகள் :

ஷ்ரேயாஸ் ஐயருக்கு ரூ.12 லட்சம் அபராதம்..! இந்த சீசனில் முதல்முறை!

post image

சிஎஸ்கேவுக்கு எதிரான போட்டியில் பஞ்சாப் கேப்டனுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

மெதுவாக பந்துவீசியதால் ரூ.12 லட்சம் அபராதம் ஸ்ரேயாஷ் ஐயருக்கு விதிக்கப்பட்டதாக ஐபிஎல் நிர்வாகம் அறிவித்துள்ளது.

சேப்பாக்கில் நேற்றிரவு நடைபெற்ற போட்டியில் 19.4ஆவது ஓவரில் பஞ்சாப் அணி த்ரில் வெற்றி பெற்றது.

முதலில் பேட் செய்த சிஎஸ்கே 190க்கு ஆல் அவுட்டானது. அடுத்து விளையாடிய பஞ்சாப் அணியில் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் 41 பந்துகளில் 72 ரன்கள் குவித்தார்.

இந்தப் போட்டியில் சிறப்பாக விளையாடியதாலும் சஹாலை 19ஆவது ஓவரில் கொடுத்ததும் திருப்பு முனையாக அமைந்தது. இதனால், இறுதியில் ஷ்ரேயாஸ் ஐயருக்கு ஆட்ட நாயகன் விருது கிடைத்தது.

பஞ்சாப் அணிக்கு இது முதல்முறை என்பதால் ஐபிஎல் விதி 2.22இன் படி ரூ.12 லட்சம் மட்டுமே விதிக்கப்பட்டுள்ளது.

கடந்தமுறை கேகேஆர் அணிக்கு கோப்பையை வென்று கொடுத்த ஷ்ரேயாஸ் ஐயர் தற்போது பஞ்சாப் அணிக்கும் கோப்பையை வென்று தருவார் என்ற நம்பிக்கையை ரசிகர்களிடம் விதைத்துள்ளார்.

புள்ளிப் பட்டியலில் பஞ்சாப் அணி 2-ஆவது இடத்தில் இருக்கிறது.

ஐபிஎல் ரோபோ நாய்க்கு காப்புரிமை கோரி தில்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு!

ஐபிஎல் ரோபோ நாய்க்கு காப்புரிமை கோரி தில்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.நடப்பு ஐபிஎல் தொடர் பல்வேறு நகரங்களில் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. ஐபிஎல்லில் கடந்த ஏப்ரல் 13 ஆம் தேதி நடைபெற்... மேலும் பார்க்க

சிஎஸ்கேவுக்கு எதிராக ஹாட்ரிக் விக்கெட் எப்படி சாத்தியமானது? ரகசியம் பகிர்ந்த சஹால்!

சென்னை சூப்பர் கிங்ஸுக்கு எதிரான போட்டியில் ஹாட்ரிக் விக்கெட் எடுத்தது குறித்து பஞ்சாப் கிங்ஸ் வீரர் யுஸ்வேந்திர சஹால் மனம் திறந்துள்ளார்.ஐபிஎல் தொடரில் சென்னை சேப்பாக்கம் திடலில் நடைபெற்ற நேற்றையப் ப... மேலும் பார்க்க

பதிரானா பந்துவீச்சில் புதிய விஷயங்களை முயற்சிக்க வேண்டும்: சிஎஸ்கே பயிற்சியாளர்

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வேகப் பந்துவீச்சாளர் மதீஷா பதிரானா அவரது பந்துவீச்சில் புதிய விஷயங்களை முயற்சிக்க வேண்டும் என சிஎஸ்கேவின் பந்துவீச்சு பயிற்சிளார் எரிக் சிமன்ஸ் தெரிவித்துள்ளார்.ஐபிஎல் தொ... மேலும் பார்க்க

ஆட்டத்தின் சூழல்களை நன்றாக புரிந்துகொள்ளும் ஷ்ரேயாஸ் ஐயர்; ரிக்கி பாண்டிங் பாராட்டு!

ஷ்ரேயாஸ் ஐயர் மிகவும் முதிர்ச்சியடைந்த வீரராக மாறிவிட்டதாக பஞ்சாப் கிங்ஸ் அணியின் பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் பாராட்டியுள்ளார்.ஐபிஎல் தொடரில் சென்னை சேப்பாக்கம் திடலில் நடைபெற்ற நேற்றையப் போட்டியில் ... மேலும் பார்க்க

தோனி யாருக்கும் எதையும் நிரூபிக்க வேண்டியதில்லை: ஆடம் கில்கிறிஸ்ட்

சிஎஸ்கே கேப்டன் தோனி குறித்து முன்னாள் ஆஸி. வீரர் ஆடம் கில்கிறிஸ்ட் அவர் யாருக்கும் தன்னை நிரூபிக்க வேண்டியதில்லை எனக் கூறியுள்ளார். தோனி கடைசியாக 2023இல் கேப்டனாக இருக்கும்போது சிஎஸ்கே அணி தனது 5-ஆவத... மேலும் பார்க்க

ஐபிஎல் தொடரிலிருந்து விக்னேஷ் புதூர் விலகல்: மாற்று வீரர் அறிவிப்பு!

மும்பை இந்தியன்ஸ் அணியின் இளம் வீரர் விக்னேஷ் புதூர் ஐபிஎல் தொடரிலிருந்து விலகியுள்ளார்.காயம் காரணமாக நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து இளம் சுழல்பந்து வீச்சாளர் விக்னேஷ் புதுர் விலகியதாக 5 முறை கோப்பை வென்... மேலும் பார்க்க