செய்திகள் :

`ரூ.10,000 பந்தயம்' - 5 பாட்டில் மதுவை ராவாய் குடித்த இளைஞர்.. சவாலுக்காக உயிரை விட்ட பரிதாபம்..!

post image

கர்நாடகா மாநிலம் கோலார் மாவட்டத்தில் உள்ள நன்கலி என்ற இடத்தைச் சேர்ந்தவர் கார்த்திக் (21). கார்த்திக்கும் அவரது நண்பர்கள் சிலரும் அமர்ந்து அடிக்கடி மது அருந்துவதுண்டு.

அப்படி அவர்கள் மது அருந்த அமர்ந்த போது, கார்த்திக்கிடம் அவரது நண்பர் வெங்கட ரெட்டி என்பவர் 5 முழு பாட்டில் மதுவை தண்ணீர் கலக்காமல் குடித்தால் ரூ.10,000 கொடுப்பதாக சவால் விட்டார். அவரது சவாலை ஏற்றுக்கொண்ட கார்த்திக் உடனே 5 பாட்டில் மதுவை தண்ணீர் ஊற்றாமல் சிறிது நேரத்தில் குடித்து முடித்தார்.

ஆனால் மது குடித்த சிறிது நேரத்தில் கார்த்திக் உடல்நிலை பாதிக்கப்பட்டது. உடனே அவர் அருகில் உள்ள முல்பகல் என்ற இடத்தில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு டாக்டர்கள் அவருக்கு தீவிர சிகிச்சையளித்தனர். ஆனால் சிகிச்சை பலனலிக்காமல் அவர் உயிரிழந்தார்.

இது குறித்து போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தனர். போலீஸார் வழக்குப்பதிவு செய்து இரண்டு பேரை கைது செய்துள்ளனர். 6 பேர் மீது வழக்கு பதிவு செய்யபட்டுள்ளது.

கார்த்திக்கிற்கு கடந்த ஒரு வருடத்திற்கு முன்புதான் திருமணமாகி இருந்தது. அவரது மனைவிக்கு கடந்த சில தினங்களுக்கு முன்புதான் குழந்தை பிறந்திருந்தது.

உலகம் முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் மது குடித்து 2.6 மில்லியன் பேர் உயிரிழந்து வருவதாக உலக சுகாதார மையம் கவலையுடன் தெரிவித்துள்ளது.

``social media-வை விட, நிஜ வாழ்க்கையின் மதிப்பு முக்கியம்..'' - Influencer மரணம் குறித்து டாப்ஸி

2k கிட்ஸின் பெரும் உழைப்பு followers எண்ணிக்கையை அதிகரிப்பதற்குதான் செலவழிக்கப்படுகிறது. அதில்தான் தங்களின் மதிப்பு இருப்பதாகக் கருதுகின்றனர். followers எண்ணிக்கை கூடும்போது கொண்டாடுவதும், குறையும் போ... மேலும் பார்க்க

`வீட்டில் டார்ச்சர்' - டியூசனுக்கு வந்த மாணவனுடன் எஸ்கேப் ஆன ஆசிரியை - நடந்தது என்ன?

குஜராத் மாநிலம் சூரத்தை சேர்ந்த 23 வயது பெண் தனது வீட்டில் மாணவர்களுக்கு டியூசன் நடத்தினார். அவரிடம் 5-வது வகுப்பு படிக்கும் 11 வயது மாணவன் ஒருவனும் டியூசன் படித்துள்ளான். 23 வயது பெண்ணிடம் அவரது பெற்... மேலும் பார்க்க

ரீல்ஸ் எடுத்த பெண்ணிடம் தவறாக நடந்த இளைஞர்; பதிலுக்கு பெண் செய்த வேலை.. - வைரல் வீடியோ!

வட இந்தியாவைச் சேர்ந்த இன்ஃப்ளுயன்சர் ஒருவர், வீட்டின் மாடிப் பகுதியில் ரீல்ஸ் எடுத்துக் கொண்டிருக்கும்போது இடையில் வந்த இளைஞர் அந்தப் பெண்ணை தகாத முறையில் தொடும்படியான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகி... மேலும் பார்க்க

``நோ லிமிட், நோ கமிட்மெண்ட்'' - சீன இளைஞர்கள் விரும்பும் `நட்பு திருமணம்'.. காரணம் என்ன?

வாழ்க்கைத் துணையை தேர்ந்தெடுக்கிறோம் என்றால் அதில் காதல், காமம், பொறுப்புகள் என பல விஷயங்கள் இருக்கும். ஜென் z தலைமுறையினரிடம் திருமணம் இல்லாத உறவுகள் பிரபலம் அடைந்து வரும் நிலையில், சீனாவில் காதல் இல... மேலும் பார்க்க

கல்யாணத்தில் ஒலித்த பாடல்; திருமணத்தை நிறுத்திய மணமகன் - பின்னணி இதுதான்

இந்தியாவில் திருமண சீசன் தொடங்கியுள்ளது. நாடு முழுவதும் பல இதயங்கள் இணையும் விழாக்கள் நடந்துகொண்டிருக்க, பல வித்தியாசமான சம்பவங்களும் அரங்கேறுகின்றன. டெல்லியில் நடந்த திருமண நிகழ்வில் எதிர்பாராத திருப... மேலும் பார்க்க

மகாராஷ்டிரா: குறுகிய கால விசாவில் இருக்கும் 1000 பாகிஸ்தானியர்கள் வெளியேற பட்னாவிஸ் உத்தரவு

காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் கடந்த சில தினங்களுக்கு முன்பு தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 28 சுற்றுலா பயணிகள் உயிரிழந்துள்ளனர். இத்தாக்குதலில் பாகிஸ்தான் ஆதரவு பெற்ற தீவிரவாத அமைப்பு ஈடுபட்டு இருப்பத... மேலும் பார்க்க