தாயில்லாத நேரத்தில் 15 வயது குழந்தையை நேர்ந்த கொடூரம் - புதுச்சேரியில் அதிர்ச்சி
புதுச்சேரி முத்தியால்பேட்டை மீனவ கிராமத்தைச் சேர்ந்தவர் பூவரசன். 45 வயதான இவருக்குத் திருமணமாகி இரண்டு குழந்தைகள் இருக்கின்றன. இந்த நிலையில் வேறு ஒரு பெண்ணுடன் இவர் திருமண தாண்டிய உறவில் இருந்து வந்திருக்கிறார்.
அந்தப் பெண்ணின் மகள், இந்தக் கல்வியாண்டில் 10-ம் வகுப்பு பொதுத் தேர்வை எழுதியிருக்கிறார். சம்பவத்தன்று அந்தப் பெண்ணின் வீட்டிற்கு சென்றிருக்கிறான் பூவரசன். அப்போது வீட்டிலிருந்த அவரின் மகள், அம்மா வெளியே சென்றிருப்பதாகக் கூறியிருக்கிறார். அதைப் பயன்படுத்திக் கொண்ட பூவரசன், அந்த சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு தப்பியோடியிருக்கிறார்.

அதையடுத்து வீட்டிற்கு வந்த தன் தாயிடம், நடந்தவற்றைக் கூறி தேம்பி அதிருக்கிறார் அந்த சிறுமி. அதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுமியின் தாய், முத்தியால்பேட்டை காவல் நிலையத்தில் புகாரளித்திருக்கிறார். உடனே குழந்தையை மீட்ட போலீஸார், மருத்துவ பரிசோதனைக்காக அவரை ராஜீவ் காந்தி குழந்தைகள் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றிருக்கின்றனர். அங்கு சிறுமி பாலியல் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டிருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். அதையடுத்து முத்தியால்பேட்டையில் பதுங்கியிருந்த பூவரசனை போக்சோ வழக்கில் கைது செய்து, காலாப்பட்டு மத்திய சிறையில் அடைத்தனர்.