செய்திகள் :

`கஸ்டமர்ஸ்க்கு மொபைல் ஆப்; சேப்டிக்கு வாடகை வீடு' - பாலியல் தொழில் செய்த 4 பெண்கள் கைது

post image

தஞ்சாவூரில் தமிழ் பல்கலைக்கழக காவல் நிலையத்திற்கு உட்பட்ட குடியிருப்பு பகுதிகளில் வாடகைக்கு வீடு எடுத்து பாலியல் தொழில் நடப்பதாக போலீஸாருக்கு தகவல் சென்று கொண்டே இருந்தது.

இதில் சில பெண்கள் தொடர்ந்து பாலியல் தொழிலை செய்து வருவதும் தெரியவந்தது. மேலும் பாலியல் தொழிலில் ஈடுபடும் பெண்கள் தொழில் வசதிக்காக குற்றப் பின்னணி உள்ளவர்களிடம் தொடர்பு வைத்திருந்துள்ளனர். இதனால் பல குற்றச்சம்பவங்களும் நடந்து வந்துள்ளன.

இந்த நிலையில், தஞ்சாவூர் எஸ்.பி ராஜாராம் மற்றும் வல்லம் டிஎஸ்பி உத்தரவின் பேரில் தமிழ் பல்கலைக்கழக காவல் உதவி ஆய்வாளர் விஷ்ணு பிரசாத், தனிப்படை காவலர் சையத் அலி உள்ளிட்ட போலீஸ் டீம் தீவிர சோதனையில் ஈடுப்பட்டனர்.

இதில் கடந்த 3 மாதங்களில் 4 பாலியல் வழக்குகள் பதிவு செய்து இதில் ஈடுபட்ட நான்கு பெண்களை கைது செய்துள்ளனர்.

இது குறித்து எஸ்.ஐ விஷ்ணு பிரசாத் கூறுகையில், "தமிழ்ப் பல்கழைக்கழக காவல் நிலைய பகுதிகளான புதுக்கோட்டை சாலை, மாதாக்கோட்டை, நாஞ்சிக்கோட்டை சாலை உள்ளிட்ட பகுதிகளில் பாலியல் தொழில் நடப்பதாக தகவல் வந்தது.

குறிப்பாக குடியிருப்பு பகுதிகளில் வாடகைக்கு வீடு எடுத்து சில பெண்கள் பாலியல் தொழிலை நடத்தி வந்துள்ளனர். போலீஸ் ரெய்டுக்கு போனால் போலீஸ் தவறாக நடந்து கொண்டதாக கூறி திசைதிருப்பி தப்பிப்பதையும் இதற்கு முன்பு வாடிக்கையாக வைத்துள்ளனர்.

தஞ்சாவூர் நகரம்

இதனால் எங்க டீம் தொடக்கத்தில் இருந்தே எச்சரிக்கையாக செயல்பட்டோம். எந்தெந்த வீடுகளில் யார் ஈடுபடுகிறார்கள் என்பதை அறிந்து ஆதாரப்பூர்வமாக கைது செய்வதற்கான ஏற்பாட்டை செய்தோம்.

அதன்படி பாலியல் தொழிலில் ஈடுப்பட்ட புதுக்கோட்டை ரோடு நயரா பெட்ரோல் பங்க் அருகே மஞ்சுளா (50), மாதா கோட்டை வைரம் நகரில் கிருத்திகா(37), வங்கி ஊழியர் காலனி ஆறாவது தெருவில் ரெஜியா பானு (43), நாஞ்சிக்கோட்டை ரோடு ஆலமரம் ராஜாஜி தெருவில் பழனியம்மாள்(32) ஆகிய நான்கு பேரை கைது செய்தோம்.

வீட்டுக்குள் கஸ்டமர்கள் இருக்கும் போதே கையும் களவுமாக பிடித்து விட்டோம். விசாரணையில், சில மாதங்களுக்கு முன்பு ஏழுப்பட்டியில் நடந்த கொலை சம்பவத்தில் தொடர்புடையவர்களுக்கு இடம் கொடுத்து தங்க வைத்ததும் தெரிய வந்தது.

போலீஸ் ரெய்டுக்கு போன பிறகு தான் ஹவுஸ் ஓனர்களுக்கு பாலியல் தொழில் நடப்பது தெரிந்து அதிர்ச்சியடைந்தனர். ஒரு ஹவுஸ்ஓனர் மன்னிச்சிடுங்க சார்னு காலில் விழ வந்துட்டார். அந்தளவுக்கு ரகிசியமாக மொபைல் ஆப் மூலமும், ரெகுலர் கஸ்டமர்களை வைத்தும் பாலியல் தொழிலை செய்து வந்துள்ளனர்.

இதில் மஞ்சுளா ஏகப்பட்ட கில்லாடி அசந்தால் போலீஸ் மீது தப்பிருப்பது போல் நாடகமாடிடுவார் என்பதால் கவனமாக இந்த ரெய்டு ஆபரேஷனை செய்து முடித்தோம்.

சிறை

இதில் ரெஜியாபானுவை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க இருக்கிறோம். ஹவுஸ்ஓனர்கள் வீட்டை வாடகைக்கு விடும் போது வீடு எடுப்பவர்கள் குறித்து தெரிந்து சரியான நபர்கள் தானா என்பதை அறிந்து விட வேண்டும்.

வெளியூரில் வசிப்பவர்கள் வீடு சும்மா இருக்க கூடாதுனு வாடகைக்க்கு விடுகிறார்கள். இவர்கள் மிகவும் கவனமாக ஆராய்ந்து வீட்டை கொடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி வருகிறோம்" என்றார்.

தாய்லாந்திலிருந்து ஹைட்ரோபோனிக் கஞ்சா கடத்தல்; இந்திய ஹாக்கி அணி முன்னாள் வீரர் சிக்கியது எப்படி?

மும்பை பேலாப்பூரில் கடந்த வாரம் பில்டர் குருநாத் என்பவர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். அவர் தனது மகன் மீது பதிவு செய்யப்பட்டுள்ள போதைப்பொருள் வழக்கிற்காக தன்னை போலீஸார் அடிக்கடி விசார... மேலும் பார்க்க

திருமணம் மீறிய உறவு; 5 வயது சிறுவனுக்குப் பாலியல் தொல்லை; நண்பரோடு கைதான இளைஞர்; பின்னணி என்ன?

திருச்சி, ஏர்போர்ட் வசந்த நகரைச் சேர்ந்தவர் நாசர் அலி (வயது: 30). இவர், கே.கே நகர்ப் பகுதியில் ஹோட்டல் ஒன்றை நடத்தி வருகிறார்.இவருக்கும் திருமணமான ஒரு பெண்ணுக்கும் திருமணம் மீறிய உறவு இருந்து வந்துள்ள... மேலும் பார்க்க

திருமணம் மீறிய உறவு; இடையூறாக இருந்த குழந்தையை கொன்ற நண்பர்கள்.. மது போதையில் வெறிச்செயல்

நெல்லை மாவட்டம், திசையன்விளை அருகே வசிக்கும் சரோஜா (பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது). கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரண்டரை வயதில் பெண் குழந்தை இருக்கும் நிலை... மேலும் பார்க்க

மாணவிக்குப் பாலியல் தொல்லை? விசாரணைக்குப் பயந்து தூக்க மாத்திரை சாப்பிட்ட ஆசிரியர்; என்ன நடந்தது?

சென்னையைச் சேர்ந்த 13 வயது சிறுமி ஒருவர் தன்னுடைய குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவர் அரசுப் பள்ளி ஒன்றில் எட்டாம் வகுப்பு படித்து வந்தார்.இந்நிலையில் கடந்த 23.4.2025-ம் தேதி பள்ளி முடிந்து வீட்டுக... மேலும் பார்க்க

`வங்கியில் ரூ.8 கோடி மோசடி' - மகாராஷ்டிரா அமைச்சர் மீது வழக்கு.. நடந்தது என்ன?

ராதாகிருஷ்ண விகே பாட்டீல் யார்?மகாராஷ்டிரா பா.ஜ.க கூட்டணி அரசில் நீர்வளத்துறை அமைச்சராக இருப்பவர் ராதாகிருஷ்ண விகே பாட்டீல். காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த இவர் தனது மகனுக்கு காங்கிரஸ் கட்சி சீட் கொடுக்க... மேலும் பார்க்க

`இட்லி பார்சல், ரூ.8 கூடுதலாக வாங்கிய உணவகத்துக்கு ரூ.30,000 அபராதம்' - நுகர்வோர் நீதிமன்றம் அதிரடி

விழுப்புரம் வழுதரெட்டி முருகன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் ஆரோக்கியசாமி. இவர், அனைத்து நுகர்வோர் பொதுமக்கள் சுற்றுச்சூழல் பொது நலச் சங்கத்தின் மாநிலத் தலைவராக உள்ளார். இவர் கடந்த 2022 -ம் ஆண்டு செப்டம்... மேலும் பார்க்க