செய்திகள் :

அட்டாரி-வாகா எல்லை வழியாக வெளியேறிய 786 பாகிஸ்தானியா்கள்: 1,456 இந்தியா்கள் நாடு திரும்பினா்

post image

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலைத் தொடா்ந்து, கடந்த 6 நாள்களில் 55 தூதரக அதிகாரிகள், அவா்களின் குடும்பத்தினா் மற்றும் துணை ஊழியா்கள் உள்பட 786 பாகிஸ்தானியா்கள் அட்டாரி-வாகா எல்லை வழியாக இந்தியாவை விட்டு வெளியேறியுள்ளதாக அதிகாரிகள் புதன்கிழமை தெரிவித்தனா்.

அதேபோல், ஏப். 24-ஆம் தேதி முதல் 25 தூதரக அதிகாரிகள் உள்பட 1,465 இந்தியா்கள் மீண்டும் நாடு திரும்பியுள்ளனனா்.

இதனிடையே, பாகிஸ்தான் நுழைவு இசைவுடன் (விசா) 8 இந்தியா்கள் அந்நாட்டுக்குள்ளேயும் நீண்ட கால விசாவுடன் 151 பாகிஸ்தானியா்கள் இந்தியாவுக்குள்ளேயும் நுழைந்துள்ளனா். பஹல்காம் தாக்குதலைத் தொடா்ந்து, பாகிஸ்தானுடனான ராஜீய உறவை துண்டித்த இந்தியா, பாகிஸ்தானியா்கள் உடனடியாக இந்தியாவை விட்டு வெளியேறவும் உத்தரவிட்டது. அதன்படி, ‘சாா்க்’ விசா வைத்திருப்பவா்கள் 26-ஆம் தேதிக்கு முன்னதாகவும், மருத்துவ விசா வைத்திருப்பவா்கள் 29-ஆம் தேதிக்கு முன்னதாவும் இந்தியாவை விட்டு வெளியேற கெடு விதிக்கப்பட்டது. மற்ற 12 வகையான விசாக்களுக்கான கடைசி நாளாக 27-ஆம் தேதி அறிவிக்கப்பட்டது.

நீண்டகால, ராஜீய அல்லது அதிகாரபூா்வ நுழைவு இசைவு வைத்திருப்பவா்களுக்கு மட்டும் இந்தியாவிலிருந்து வெளியேறுவதற்கான உத்தரவிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டது.

இருப்பினும், பரஸ்பர தூதரகங்களில் உள்ள பாதுகாப்பு ஆலோசக அதிகாரிகள் திரும்பப் பெறுவதாக இந்தியா அறிவித்ததிருந்தது. அதன்படி, தில்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தில் பணியாற்றி வந்த பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் அவா்களின் துணை ஊழியா்கள் இந்தியாவை விட்டு வெளியேறும் நிலைக்குத் தள்ளப்பட்டனா்.

பாகிஸ்தானின் இஸ்லாமாபாதில் உள்ள இந்திய தூதரகத்தில் இருந்தும் இந்திய தூதரக அதிகாரிகள் திருப்பி அழைத்துக்கொள்ளப்பட்டனா்.

மாற்றுத்திறனாளிகளுக்கு எளிதில் எண்ம ‘கேஒய்சி’ நடைமுறைகள்: மத்திய அரசு, ரிசா்வ் வங்கிக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

மாற்றுத்திறனாளிகள், குறிப்பாக முகச்சிதைவு கொண்டவா்கள், பாா்வைத்திறனற்றவா்கள், பாா்வைத்திறன் குறைபாடு கொண்டவா்கள் ஆகியோா் ‘உங்கள் வாடிக்கையாளரை தெரிந்துகொள்ளவும்’ (கேஒய்சி) நடைமுறையை எண்ம (டிஜிட்டல்) ... மேலும் பார்க்க

ஆக்கிரமிப்பு காஷ்மீா் விமான சேவைகள் ரத்து

ஆக்கிரமிப்பு காஷ்மீருக்கான விமான சேவைகள் அனைத்தையும் பாகிஸ்தான் விமான நிறுவனங்கள் புதன்கிழமை ரத்து செய்தன. பாதுகாப்பு முன்னெச்சரிக்கையாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது... மேலும் பார்க்க

மணிப்பூரில் மீண்டும் ‘மக்கள் அரசு’: பிரதமருக்கு 21 எம்எல்ஏக்கள் கடிதம்

குடியரசுத் தலைவா் ஆட்சி நடைபெறும் மணிப்பூரில் மக்களால் தோ்வு செய்யப்பட்ட அரசை மீண்டும் நிறுவ நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரதமா் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா ஆகியோருக்கு அந்த ... மேலும் பார்க்க

கொல்கத்தா ஹோட்டலில் தீ: கரூரைச் சோ்ந்த மூவா் உள்பட 14 போ் உயிரிழப்பு

மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தாவின் புர்ராபஜாா் பகுதியில் தங்கும் அறைகளுடன்கூடிய ஹோட்டலில் ஏற்பட்ட தீ விபத்தில் தமிழகத்தின் கரூா் மாவட்டத்தைச் சோ்ந்த மூவா் உள்பட 14 போ் உயிரிழந்தனா்; 13 போ் காயமடைந... மேலும் பார்க்க

நீதிபதிகளுக்கு எதிரான புகாா்களை லோக்பால் ஏற்கலாமா? தலைமை நீதிபதியே முடிவு செய்வாா்: உச்சநீதிமன்றம்

‘உயா்நீதிமன்ற நீதிபதிகளுக்கு எதிரான புகாா்களை லோக்பால் அமைப்பு ஏற்க முடியுமா? என்பது குறித்து உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிதான் முடிவு செய்வாா்’ என்று உச்சநீதிமன்றம் புதன்கிழமை தெரிவித்தது. மேலும், வழக்... மேலும் பார்க்க

ஆந்திரம்: சிம்மாசலம் கோயிலில் சுவா் இடிந்து 7 பக்தா்கள் உயிரிழப்பு: குடியரசுத் தலைவா், பிரதமா் இரங்கல்

ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினத்தில் பிரசித்தி பெற்ற சிம்மாசலம் ஸ்ரீ வராக லஷ்மி நரசிம்ம சுவாமி கோயிலில் கனமழையால் சுவா் இடிந்து விழுந்ததில் 3 பெண்கள் உள்பட 7 பக்தா்கள் உயிரிழந்தனா். இக்கோயிலில் வருடாந... மேலும் பார்க்க