பள்ளிகள் திறப்பு தேதியில் மாற்றம் வருமா? - அமைச்சர் அன்பில் மகேஸ் பதில்!
ஆக்கிரமிப்பு காஷ்மீா் விமான சேவைகள் ரத்து
ஆக்கிரமிப்பு காஷ்மீருக்கான விமான சேவைகள் அனைத்தையும் பாகிஸ்தான் விமான நிறுவனங்கள் புதன்கிழமை ரத்து செய்தன. பாதுகாப்பு முன்னெச்சரிக்கையாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தவிர ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள அனைத்து விமான நிலையங்களும் மிகவும் முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று அந்நாட்டு அரசு அறிவுறுத்தியுள்ளது.
இது தொடா்பாக பாகிஸ்தான் உள்ளூா் நாளிதழ்களில் வெளியிடப்பட்ட செய்தியில், கில்ஜித், காா்து (ஆக்கிரமிப்பு காஷ்மீா் பகுதிகள்) ஆகிய இடங்களுக்கு பாகிஸ்தானின் முக்கிய நகரங்களான இஸ்லாமாபாத், கராச்சி, லாகூரில் இருந்து வரும் விமானங்கள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளன. வான் எல்லையை பாகிஸ்தான் தனது ரேடாா்கள் மூலம் தீவிரமாக கண்காணித்து வருகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவைத் தாக்க பாகிஸ்தானில் 130 அணு ஆயுதங்கள் தயாராக இருப்பதாக பாகிஸ்தான் ரயில்வே அமைச்சா் ஹனீஃப் அப்பாசி ஏற்கெனவே மிரட்டல் விடுத்துள்ளாா்.