60 வயசுக்கு மேல மாசாமாசம் உங்களுக்கு பென்ஷன் வேணுமா? இதை ஃபாலோ பண்ணுங்க!
ஏடிஎம் கட்டண உயர்வு இன்று முதல் அமல்
இந்திய ரிசர்வ் வங்கி வழிகாட்டுதலின்படி, வங்கி ஏடிஎம் கார்டு மூலம் ஏடிஎம் மையங்களில் பணம் எடுப்பது, இருப்பு தொகையை அறிவதற்கான புதிய விதிமுறைகள் (மே.1) முதல் அமலுக்கு வந்துள்ளது. இலலவச பரிவர்த்தனைக்கு மேல் பயன்படுத்தப்படும் ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் கூடுதல் கட்டணமாக ரூ.23 செலுத்த வேண்டும்.
ஏடிஎம் மையங்களை நிர்வகிக்கும் செலவு அதிகரித்து வருவதால், ஏடிஎம் மையங்களில் பரிவர்த்தனையின்போது, வசூலிக்கப்படும் கட்டண அளவை கடந்த மார்ச் மாதம் இந்திய ரிசர்வ் வங்கி உயர்த்தி அறிவித்தது.
மத்திய ரிசர்வ் வங்கியின் புதிய அறிவிப்பின்படி, மாதம்தோறும் 5 முறை மட்டும் கட்டணமின்றி ஏடிஎம்களை பயன்படுத்த வாடிக்கையாளா்கள் அனுமதிக்கப்படுகின்றனா். இதில் பணம் எடுப்பது மட்டுமின்றி இருப்பு விவரங்களைத் தெரிந்து கொள்வது உள்ளிட்ட பிற ஏடிஎம் சேவைகளும் அடங்கும்.
அதன்பிறகு இலவச ஏடிஎம் பரிவர்த்தனை வரம்பு முடிந்த பிறகு, பயன்படுத்தப்படும் ஒவ்வொரு முறைக்கும் ரூ.21 கட்டணமாக வசூலிக்கப்பட்டு வருகிறது. இது மே 1-ஆம் தேதி முதல் ரூ. 2 உயா்த்தி ரூ.23 வசூலிக்க வங்கிகளுக்கு ஆா்பிஐ அனுமதி அளித்திருந்தது.
பாகிஸ்தானுக்கு வான்வழிப் பாதையை மூடியது இந்தியா
அதே நேரத்தில் தாங்கள் கணக்கு வைக்காத பிற வங்கி ஏடிஎம்களைப் பயன்படுத்தும்போது பெருநகரங்களில் மூன்று முறையும், பிற பகுதிகளில் 5 முறையும் கட்டணமின்றி பயன்படுத்த அனுமதிக்கப்படுகிறது. இதன் பிறகு ஏடிஎம்மை பயன்படுத்தினால் மே 1-ஆம் தேதி முதல் ஒருமுறைக்கு ரூ.23 கட்டணம் வசூலிக்கப்படும்.
மேலும், வங்கி கணக்கில் பணம் எவ்வளவு இருக்கிறது என்பதை சரிபார்ப்பதற்கு ரூ.6 இல் இருந்து ரூ.7 ஆக வசூலிக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், ஏடிஎம் இல் ஐந்து முறைக்கு மேல் பயன்படுத்தினால் ஒவ்வொரு பரிவர்த்தனைக்குமான ரூ.23 கூடுதல் கட்டண உயர்வு வியாழக்கிழமை(மே.1) முதல் அமலுக்கு வந்துள்ளது.