திராவிடர்கள் என்றாலே தொழிலாளர்கள்தான்: முதல்வர் மு.க.ஸ்டாலின்
மோசமான அரசியலில் ஈடுபடும் பஞ்சாப் அரசு: அமைச்சர் குற்றச்சாட்டு!
ஹரியாணா, பஞ்சாப் இடையே நதி நீர் பங்கீடு தொடர்பாக நடந்துவரும் வார்த்தைப் போரில் ஆம் ஆத்மியை ஆளும் பஞ்சாப் அரசு தில்லியில் தண்ணீர் விநியோகத்தை நிறுத்துவதன் மூலம் மோசமான அரசியலில் ஈடுபடுவதாகத் தில்லி பாஜக அரசு குற்றம் சாட்டியது.
ஹரியாணாவின் கோரிக்கைகளை நிறைவேற்ற பக்ரா வியாஸ் மேலாண்மை வாரியம்(பிபிஎம்பி) மூலம் பஞ்சாப் அரசுக்கு பாஜக அழுத்தம் கொடுப்பதாக முதல்வர் பகவந்த் மான் குற்றம் சாட்டினார். மார்ச் மாதத்திற்குள் அண்டை மாநிலம் தனது நீர் பங்கை அளித்துவிட்டதாக அவர் கூறினார்.
இதுதொடர்பாக தில்லி நீர்வள அமைச்சர் பர்வேஷ் வர்மா,
ஹரியாணா, தில்லிக்கு யமுனை நதிநீரை நிறுத்துவன் மூலம் ஆம் ஆத்மி ஆட்சி செய்யும் பஞ்சாப் அரசு மோசமான அரசியலில் ஈடுபட்டுள்ளதாகக் குற்றம் சாட்டினார்.
தில்லியில் தோல்வியடைந்த பிறகு அவர்கள் தில்லியில் தண்ணீர் நெருக்கடியை உருவாக்க விரும்புகிறார்கள். இருப்பினும், வியாழக்கிழமை நிலவரப்படி நீர் விநியோகம் வழக்கம்போல் பராமரிக்கப்படுவதாக தில்லி நீர் வளத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
தில்லியில் உள்ள ஒவ்வொரு வீட்டிற்கும் சுத்தமான நீர் வழங்க இரவும், பகலும் உழைத்து வருகிறோம். ஆனால் பஞ்சாப் அரசு தில்லி மக்களைப் பழிவாங்க விரும்புகிறது. இந்த மோசமான அரசியலை நிறுத்துங்கள், இல்லையெனில் பஞ்சாபிலிருந்தும் வெளியேற்றப்படுவீர்கள் என்று வர்மா கூறினார்.