செய்திகள் :

மாணவர்களிடமிருந்து ரூ.250 கோடி வசூலித்த தனியார் பயிற்சி மையம்: அமலாக்கத் துறை!

post image

நாடு முழுவதும் தனியார் பயிற்சி மையத்தின் அலுவலகங்களில் இரண்டு நாள்கள் சோதனை நடத்திய அமலாக்கத் துறை, நுழைவுத் தேர்வுகளுக்கு பயிற்சி அளிப்பதாகக் கூறி 14,000 மாணவர்களிடமிருந்து ரூ.250 கோடியை பெற்று மோசடி செய்திருப்பதாகத் தெரிவித்துள்ளது.

இந்த தனியார் பயிற்சி நிறுவனமானது, மிக மோசமான பண மோசடியில் ஈடுபட்டிருப்பது தெரிய வந்திருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.

ஒட்டுமொத்தமாக நாடு முழுவதும் பல்வேறு மையங்களிலும் 14,411 மாணவர்களிடமிருந்து ரூ.250,2 கோடியை வசூலித்திருப்பதாகவும், 2025 - 26 முதல் 2028 - 29ஆம் ஆண்டு வரை பயிற்சி அளிப்பதாகவும் பெற்றோருக்கு உறுதி அளித்திருக்கிறது.

பயிற்சி வழங்குவதாகக் கூறி பணத்தை மட்டும் வசூலித்துவிட்டு முறையாக பயிற்சி வழங்கவில்லை. பெற்றோரிடமிருந்த பெற்ற பணத்தை வேறு செலவினங்களுக்கு செலவிட்டுவிட்டு, பயிற்சியாளர்களுக்கு பல மாத ஊதியம் நிலுவையில் வைக்கப்பட்டிருப்பதகாவும் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதனால் நாடு முழுவதும் 32 பயிற்சி மையங்கள் மூடப்பட்டு, பணம் கட்டிய பெற்றோரும் மாணவர்களும் நிற்கதியாக விடப்பட்டுள்ளனர்.

பல்வேறு ஆவணங்கள் மற்றும் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைகள் மூலம், இந்த நிறுவனம் பெற்றோரிடமிருந்த வசூலிக்கும் தொகை பயிற்சி நிறுவனங்களை நடத்துவதற்காக செலவிடாமல் இருந்துள்ளது அப்பட்டமாகத் தெரிய வந்திருப்பதாகக் கூறப்பட்டுள்ளது.

தனியார் பயிற்சி மையத்தின் இயக்குநர் டி.கே. கோயல், நிறுவனத்தின் நிர்வாகிகள் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் கடந்த 24ஆம் தேதி அமலாக்கத் துறை தீவிர சோதனை நடத்தியிருந்தது. இதில் ரூ.10 லட்சம் ரொக்கப் பணமும் ரூ.4.98 கோடி மதிப்புள்ள தங்கமும் பறிமுதல் செய்யப்பட்டன. ஏராளமான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.

பாஜக 400 இடங்கள் பெற்றிருந்தால் இடஒதுக்கீடு நீக்கப்பட்டிருக்கும்: தெலங்கானா முதல்வர்!

மக்களவையில் பாஜக 400 இடங்கள் பெற்றிருந்தால் இடஒதுக்கீடானது ரத்து செய்யப்பட்டிருக்கும் என தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி கூறியுள்ளார். மத்திய அரசை அமைத்துள்ள பாஜக மட்டும் மக்களவத் தேர்தலில் 400 இடங்... மேலும் பார்க்க

பஹல்காம் தாக்குதலுக்கு முன், 3 இடங்களுக்கு குறிவைத்த பயங்கரவாதிகள்?

பஹல்காம் தாக்குதலுக்கு முன்னதாக ஜம்மு - காஷ்மீரில் 3 இடங்களில் தாக்குதல் நடத்த பயங்கரவாதிகள் திட்டமிட்டுள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. ஜம்மு-காஷ்மீர் பஹல்காம் சுற்றுலாப் பகுதியில் கடந்த ஏப். 22 அ... மேலும் பார்க்க

மோசமான அரசியலில் ஈடுபடும் பஞ்சாப் அரசு: அமைச்சர் குற்றச்சாட்டு!

ஹரியாணா, பஞ்சாப் இடையே நதி நீர் பங்கீடு தொடர்பாக நடந்துவரும் வார்த்தைப் போரில் ஆம் ஆத்மியை ஆளும் பஞ்சாப் அரசு தில்லியில் தண்ணீர் விநியோகத்தை நிறுத்துவதன் மூலம் மோசமான அரசியலில் ஈடுபடுவதாகத் தில்லி பாஜ... மேலும் பார்க்க

ஜார்க்கண்டில் சாலை ஒப்பந்ததாரர் மாவோயிஸ்டுகளால் சுட்டுக் கொலை!

ஜார்க்கண்டின் லதேஹர் மாவட்டத்தில் சாலை ஒப்பந்த மேற்பார்வையாளர் ஒருவர் மாவோயிஸ்ட்டுகளால் சுட்டுக் கொல்லப்பட்டதாக போலீஸார் வியாழக்கிழமை தெரிவித்தனர்.புதன்கிழமை இரவு மஹுவாதன்ர் காவல் நிலையப் பகுதியில் உள... மேலும் பார்க்க

நாடுகடத்தப்பட வேண்டிய பாகிஸ்தானியர் ஒருவர் திடீர் மரணம்!

பஞ்சாப் மாநிலத்தில் பாகிஸ்தானுக்கு நாடுகடத்தப்பட வேண்டிய நபர் ஒருவர் திடீரென மரணமடைந்துள்ளார்.பஹல்காமில் சுற்றுலாப் பயணிகள் மீது பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 26 பேர் கொல்லப்பட்டனர். இந்... மேலும் பார்க்க

மாற்றுத்திறனாளிகளுக்கு எளிதில் எண்ம ‘கேஒய்சி’ நடைமுறைகள்: மத்திய அரசு, ரிசா்வ் வங்கிக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

மாற்றுத்திறனாளிகள், குறிப்பாக முகச்சிதைவு கொண்டவா்கள், பாா்வைத்திறனற்றவா்கள், பாா்வைத்திறன் குறைபாடு கொண்டவா்கள் ஆகியோா் ‘உங்கள் வாடிக்கையாளரை தெரிந்துகொள்ளவும்’ (கேஒய்சி) நடைமுறையை எண்ம (டிஜிட்டல்) ... மேலும் பார்க்க