சாதி கணக்கெடுப்புக்கு நிதி, காலவரையறை அவசியம்: கார்கே வலியுறுத்தல்
ஜார்க்கண்டில் சாலை ஒப்பந்ததாரர் மாவோயிஸ்டுகளால் சுட்டுக் கொலை!
ஜார்க்கண்டின் லதேஹர் மாவட்டத்தில் சாலை ஒப்பந்த மேற்பார்வையாளர் ஒருவர் மாவோயிஸ்ட்டுகளால் சுட்டுக் கொல்லப்பட்டதாக போலீஸார் வியாழக்கிழமை தெரிவித்தனர்.
புதன்கிழமை இரவு மஹுவாதன்ர் காவல் நிலையப் பகுதியில் உள்ள ஓர்சா கிராமத்தில் இந்த சம்பவம் நடந்ததாக அவர்கள் தெரிவித்தனர்.
சாலை கட்டுமானப் பணிகளில் பயன்படுத்தப்பட்ட பல இயந்திரங்களும் தீக்கிரையாக்கப்பட்டதாகவும், சாலை ஓப்பந்த மேற்பார்வையாளர் மாவோயிஸ்டுகளால் கொல்லப்பட்டதாகவும் தெரிவித்தனர்.
போலீஸ் குழுக்கள் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளதாக எஸ்பி குமார் கௌரவ் கூறினார்.
மாவோயிஸ்டுகளால் இறந்தவர் அயூப் கான் என அடையாளம் காணப்பட்டுள்ளார், அவர் அந்தப் பகுதியில் சாலை அமைக்கும் ஒப்பந்ததாரரின் மேற்பார்வையாளர் என்று அவர் கூறினார்.