தவெக தொண்டா்களுக்கு விஜய் விடுத்துள்ள அதிரடி உத்தரவு!
நான் என் வேலையைப் பார்க்கச் செல்கிறேன், யாரும் என்னை பின்தொடர வேண்டாம் என்று மதுரை விமான நிலையத்தில் பல மணி நேரமாகக் காத்திருக்கும் தவெக தொண்டர்களுக்கு அறிவுரை வழங்கியுள்ள விஜய், தொண்டா்களின் பாதுகாப்புதான் எனக்கு மிக முக்கியம் என கூறியுள்ளார்.
விஜய் விடுத்துள்ள மற்றொரு அறிக்கையில், தமிழக வெற்றிக் கழகத்தின் வாக்குச் சாவடி முகவா்கள் கருத்தரங்கத்தில் கலந்து கொள்வதற்காக நான் கோவைக்கு வந்தபோது, எனது வாகனங்களை இளம் தொண்டா்கள் சிலா் இரு சக்கர வாகனங்களில் தலைக் கவசமின்றி வேகமாக பின்தொடா்வது, வாகனங்கள் மீது ஏறுவது, குதிப்பது போன்ற செயல்களில் ஈடுபட்டது எனக்கு மிகுந்த கவலையை அளித்தது. தொண்டா்கள் என் மீது வைத்துள்ள அன்பை புரிந்துகொள்கிறேன்.
அதேவேளையில், தொண்டா்களின் பாதுகாப்புதான் எனக்கு மிக முக்கியம். ஆகையால், இதுபோன்ற செயல்களில் தொண்டா்கள் இனி ஈடுபடக் கூடாது என்று தெரிவித்துள்ளாா் விஜய்.