செய்திகள் :

37 மடங்கு வலிமைமிக்க உலகின் முதல் எஸ்டி கார்டு! துருப்பிடிக்காத உலோகத்தில்..!

post image

துருப்பிடிக்காத உலோகத்தில் உலகின் முதல் எஸ்டி கார்டை லெக்ஸார் என்ற நிறுவனம் தயாரித்துள்ளது.

எஸ்டி கார்டு (SD card) பயன் என்ன?

எஸ்டி கார்டு (SD card) என்பது நினைவகத்தை சேமித்து வைக்கப் பயன்படுகிறது. இது கேமராக்கள், மொபைல் போன்கள் மற்றும் பிற மின்னணு சாதனங்களில் பயன்படுத்தப்படுகிறது. 

இது தரவுகளை சேமித்து வைப்பதற்கும், ஒரு சாதனத்திலிருந்து மற்றொரு சாதனத்திற்கு மாற்றுவதற்கும் பயன்படுத்தப்படுகிறது. எஸ்டி கார்டு, டிஜிட்டல் கேமராக்கள், விடியோ கேமராக்கள் மற்றும் மொபைல் போன்களில் பயன்படுத்துவதற்கு மிகவும் வசதியாக வடிவமைக்கப் பட்டிருந்தாலும், இவை பிளாஸ்டிக்கால் மட்டுமே உருவாக்கப்பட்டு மக்களின் பயன்பாட்டில் இருந்தது.

சிறப்புகள் என்ன?

இதனை மாற்றும் வகையில் முதல் முறையாக துருப்பிடிக்காத உலோகத்தில் லெக்ஸார் என்ற நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த லெக்ஸார் நிறுவனம் புதிய முயற்சியாக தங்களது சமீபத்திய கண்டுபிடிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதில், இரண்டு எஸ்டி கார்டுகள் வெளியிடப்பட்டுள்ளன. அவை Lexar ARMOR GOLD SDXC UHS-II Card மற்றும் Lexar ARMOR SILVER PRO SDXC UHS-II Card.

அதிக செயல்திறனுடன் நீண்டகாலத்துக்கு வரும் வகையில் வலிமையான துருப்பிடிக்காத உலோகத்தில் இந்த எஸ்டி கார்டுகள் வடிவமைக்கப்பட்டிருக்கின்றன.

37 மடங்கு வலிமை

சாதாரணமாக பிளாஸ்டிக்கால் தயாரிக்கப்படும் எஸ்டி கார்டுகளைவிட இந்தவகை எஸ்டி கார்டுகள் 37 மடங்கு வலிமையானவை. தொழில்முறை புகைப்படக் கலைஞர்கள் அடிக்கடி சந்திக்கும் பிரச்சினையான விரைவில் உடைந்து போகும் தன்மை கொண்ட எஸ்டி கார்டுகள் மாற்றாக இவை தொழில்நுட்ப சந்தைகளில் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கின்றன.

இந்த கார்டுகள் ஐபி68 ரேட்டிங்கில் நீர்புகாத் தன்மை, தூசுப் புகாத் தன்மையுடன் வெளியுலகில் எங்கு வேண்டுமானலும் பயன்படுத்தும் வகையில், அதிகம் பயணம் மேற்கொள்பவர்கள் பயன்படுத்தும் வகையிலும் உருவாக்கப்பட்டிருக்கின்றன.

ARMOR GOLD மற்றும் SILVER PRO ஆகிய இரண்டு வகை கார்டுகளும் 6k விடியோ வரை ஆதரிக்கும் வகையில் உருவாக்கப்பட்டிருப்பதால், திரைப்பட கேமராக்களிலும் பயன்படுத்திக் கொள்ளலாம்.

யுஎஸ்பி 3.2 கார்டு ரீடருடன் பயன்படுத்தும் போது இது 280MB/s வரை தரவுகளை பரிமாற்றும் திறன் பெற்றுள்ளது. ARMOR GOLD கார்டு 210MB/s வேகத்திலும், SILVER PRO கார்டு 160MB/s வேகத்திலும் தரவுகளை பரிமாற்றும் திறன் கொண்டுள்ளன.

இந்த இரண்டு கார்டுகளும் அருகில் உள்ள கணினி கடைகளிலும், இ-காமர்ஸ் தளங்களிலும் கிடைக்கின்றன. SILVER PRO 128 GB கார்டின் விலை ரூ. 7,750-க்கும், 256 GB கார்டு ரூ. 12,250-க்கும் அதேபோல், ARMOR GOLD 128 GB கார்டு ரூ. 9,250-க்கும், 256 GB கார்டு ரூ. 16,250-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

இதையும் படிக்க: அட்சய திருதியை: ரூ.12,000 கோடிக்கு தங்கம் விற்பனை

புழுங்கல் அரிசி ஏற்றுமதி வரி 20% ஆக உயர்வு: மத்திய அரசு

இந்தியாவிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் புழுங்கல் அரிசி மற்றும் உமி நீக்கப்பட்ட சில அரிசி வகைகளுக்கு 20% ஏற்றுமதி வரியை விதித்து மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.உள்நாட்டில் அரிசி விலையை கட்டுப்பட... மேலும் பார்க்க

19 சதவீதம் உயா்ந்த வாகன ஏற்றுமதி

கடந்த 2024-25-ஆம் நிதியாண்டில் இந்தியாவின் வாகன ஏற்றுமதி 19 சதவீதம் அதிகரித்துள்ளது. இது குறித்து இந்திய வாகன உற்பத்தியாளா்கள் சங்கம் (சியாம்) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: கடந்... மேலும் பார்க்க

கடன் வட்டியைக் குறைத்த எல்ஐசி ஹவுசிங் ஃபைனான்ஸ்

தாங்கள் வழங்கும் கடன்களுக்கான வட்டி விகிதங்களை இந்தியாவின் மிகப் பெரிய வீட்டுக் கடன் சேவை நிறுவனமான எல்ஐசி ஹவுசிங் ஃபைனான்ஸ் 25 அடிப்படை புள்ளிகள் (0.25 சதவீதம்) குறைத்துள்ளது. இது குறித்து நிறுவனம் வ... மேலும் பார்க்க

சரிவைக் கண்டது அமெரிக்க பொருளாதாரம்

அமெரிக்காவின் பொருளாதாரத்துக்கு வலு சோ்ப்பதாகக் கூறி பிற நாடுகளில் இருந்து இறக்குமதியாகும் பொருள்களுக்கு அதிபா் டொனால்ட் டிரம்ப் கூடுதல் வரி விதித்துள்ளதன் எதிரொலியாக, அவா் பதவியேற்ற்குப் பிந்தைய முத... மேலும் பார்க்க

மே 1 முதல் பால் விலையை உயர்த்தும் அமுல்!

பால் உற்பத்தியில் ஈடுபட்டுவரும் அமுல் நிறுவனம், நாளை (மே 1) முதல் பாலின் விலை லிட்டருக்கு ரூ.2 உயர்த்தவுள்ளது.குஜராத் கூட்டுறவு பால் சந்தைப்படுத்தல் கூட்டமைப்பு இதனை உறுதிப்படுத்தியுள்ளது.இதுகுறித்து ... மேலும் பார்க்க

பஞ்சாப்: கோதுமை கொள்முதல் 111 லட்சம் மெட்ரிக் டன்!

சண்டீகா்: தானிய சந்தைகளிலிருந்து 114 லட்சம் மெட்ரிக் டன் கோதுமையில், இதுவரை 111 லட்சம் மெட்ரிக் டன் கோதுமை கொள்முதல் செய்யப்பட்டுள்ளதாக பஞ்சாப் உணவு மற்றும் சிவில் வழங்கல் அமைச்சர் லால் சந்த் இன்று தெ... மேலும் பார்க்க