மதுரை ரயில் நிலையத்தில் விடப்பட்ட ஆண் குழந்தை போலீஸாரிடம் ஒப்படைப்பு
மே 1 முதல் பால் விலையை உயர்த்தும் அமுல்!
பால் உற்பத்தியில் ஈடுபட்டுவரும் அமுல் நிறுவனம், நாளை (மே 1) முதல் பாலின் விலை லிட்டருக்கு ரூ.2 உயர்த்தவுள்ளது.
குஜராத் கூட்டுறவு பால் சந்தைப்படுத்தல் கூட்டமைப்பு இதனை உறுதிப்படுத்தியுள்ளது.
இதுகுறித்து குஜராத் கூட்டுறவு பால் சந்தைப்படுத்தல் கூட்டமைப்பு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்ததாவது:
பால் மற்றும் பால் பொருட்களை விற்பனை செய்யும் குஜராத் கூட்டுறவு பால் சங்கமானது, நாடு முழுவதும் மே 1, 2025 முதல் பாக்கெட் பாலின் விலையை லிட்டருக்கு ரூ. 2 உயர்த்த உள்ளதாக தெரிவித்துள்ளது.
லிட்டருக்கு ரூ. 2 உயர்வு என்பது அதிகபட்ச சில்லறை விலையில் 3 முதல் 4 சதவிகிதம் வரை உயர்வுக்கு வழிவகுக்கும். இது சராசரி உணவு பணவீக்கத்தை விட மிகக் குறைவு.
இதனிடையில், ஜூன் 2024 முதல் பாக்கெட் பாலின் விலையை அதிகரிக்கவில்லை என்று சுற்றுக்காட்டியுள்ள அமுல் நிறுவனம், 36 லட்சம் பால் உற்பத்தியாளர்களுக்கு பால் உற்பத்திக்கான செலவுகள் அதிகரித்துள்ளதால் விலை உயர்த்தப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டது.
நாடு முழுவதும் நாளை முதல் 500 மில்லி லிட்டர் அமுல் கோல்டு பால் பாக்கெட் ரூ.34-க்கும், 1 லிட்டர் பால் பாக்கெட் ரூ.67-க்கும் விற்பனை செய்யப்படும்.
'சக்தி' வகையின் 500 மில்லி பாக்கெட் பால் ரூ.31-க்கும், 500 மில்லி பசும்பால் பாக்கெட் ரூ.29 ஆகவும், ஒரு லிட்டர் எருமைப் பால் பாக்கெட் ரூ.73 ஆகவும், ஒரு லிட்டர் 'டாசா' பாக்கெட் ரூ.55 ஆகவும் விற்பனை செய்யப்படும்.
இதையும் படிக்க: பஞ்சாப்: கோதுமை கொள்முதல் 111 லட்சம் மெட்ரிக் டன்!