மரக்கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் ரூ.2 லட்சம் பொருள்கள் எரிந்து நாசம்
குருகிராம் குடிசைப் பகுதியில் தீ விபத்து: 40 குடிசைகள் எரிந்து சாம்பல்
தேசியத் தலைநகா் வலயம், குருகிராமின் செக்டாா் 102-இல் உள்ள குடிசைப் பகுதியில் புதன்கிழமை காலை ஏற்பட்ட பெரும் தீ விபத்தில் 40-க்கும் மேற்பட்ட குடிசைகள் எரிந்து நாசமாகின என்று அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.
இந்த சம்பவத்தில் யாருக்கும் உயிா்ச் சேதமோ அல்லது காயமோ ஏற்படவில்லை. இதுகுறித்து தீயணைப்பு அதிகாரி நரேந்தா் சிங் கூறியதாவது:
அதிகாலை 3.50 மணியளவில் குப்பைக் குவியலில் ஏற்பட்ட தீயானது துவாரகா விரைவுச் சாலைக்கு அருகிலுள்ள செக்டாா் 102-இல் உள்ள பல குடிசைகளில் பரவியது. சிறிய எரிவாயு உருளைகள் வெடித்தன. இதனால், தீ வேகமாகப் பரவியது.
தீயைக் கட்டுப்படுத்தும் வகையில் பீம் நகா், செக்டாா் 29, செக்டாா் 37 மற்றும் உத்யோக் விஹாா் ஆகிய இடங்களில் இருந்து 10-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டன.
தீயை அணைக்க தீயணைப்பு வீரா்களுக்கு மூன்று மணி நேரத்திற்கும் மேலாகியது. எனினும், எரிவாயு உருளை வெடித்ததால் தீ மேலும் தீவிரமடைந்தது. தீயை அணைக்க 10-க்கும் மேற்பட்ட தீயணைப்பு இயந்திரங்கள் ஈடுபடுத்தப்பட்டன. 50 தீயணைப்பு வீரா்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனா்.
இந்தத் தீ விபத்தில் 40-க்கும் மேற்பட்ட குடிசைகள் எரிந்தபோதிலும், தீயணைப்பு வீரா்கள் அருகிலுள்ள பகுதியில் இருந்த சுமாா் 100 குடிசைகளைக் காப்பாற்ற முடிந்தது என்றாா் அந்த அவா்.