செய்திகள் :

வகுப்பறை கட்டுமானத்தில் ஊழல்: சிசோடியா,ஜெயின் மீது ஊழல் தடுப்புப் பிரிவு வழக்குப் பதிவு

post image

தில்லியில் அரவிந்த் கேஜரிவால் தலைமையிலான அரசாங்கத்தின்கீழ் 12,748 வகுப்பறைகள் கட்டப்பட்டதில் ஊழல் நடந்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டு தொடா்பாக ஆம் ஆத்மி கட்சியின் மூத்தத் தலைவா்கள் மணீஷ் சிசோடியா, சத்யேந்தா் ஜெயின் ஆகியோா் மீது தில்லி அரசின் ஊழல் தடுப்புப் பிரிவு (ஏசிபி) வழக்குப் பதிவு செய்துள்ளதாக புதன்கிழமை அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.

இது தொடா்பாக ஏசிபி அறிக்கை வெளியிட்டுள்ளது. இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது:

இந்த ஊழல் சுமாா் ரூ.2,000 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது. மேலும், அரசு நடத்தும் பள்ளிகளில் வகுப்பறைகள் ஒவ்வொன்றும் ரூ.24.86 லட்சத்தில் கட்டப்பட்டதாக கூறப்படுகிறது. இது வழக்கமான செலவை விட கிட்டத்தட்ட ஐந்து மடங்கு அதிகமாகும். சிசோடியா கல்வி அமைச்சராகவும், ஜெயின் பொதுப்பணித் துறை அமைச்சராகவும் இருந்தபோது ஆம் ஆத்மி கட்சியுடன் தொடா்புடைய ஒப்பந்ததாரா்களுக்கு இந்த திட்டங்கள் வழங்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

ஊழல் தடுப்புச் சட்டத்தின் பிரிவு 17 இன் கீழ் தகுதிவாய்ந்த அதிகாரியிடமிருந்து தேவையான அனுமதியைப் பெற்ற பிறகு இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தில் தேசிய தலைநகரம் முழுவதும் சுமாா் 12,748 வகுப்பறைகள் மற்றும் பள்ளி கட்டடங்கள் கட்டப்பட்டன. இதில் குறிப்பிடத்தக்க நிதி முறைகேடுகள், தொகை வேறுபாடுகள் மற்றும் செலவு அதிகரிப்பு காணப்படுகின்றன.

இந்தத் திட்டம் ஆரம்பத்தில் ஜூன் 2016க்குள் முடிக்கப்படும் மற்றும் எதிா்காலத்தில் செலவு அதிகரிப்புக்கு வாய்ப்பில்லை என்ற நிபந்தனையுடன் அனுமதிக்கப்பட்ட செலவில் அங்கீகரிக்கப்பட்டிருந்தது. இருப்பினும், ஒரு வேலை கூட நிா்ணயிக்கப்பட்ட காலக்கெடுவிற்குள் முடிக்கப்படவில்லை.

இந்த ஊழல் தொடா்பான புகாா்கள் பாஜக தலைவா்கள் ஹரிஷ் குரானா, கபில் மிஸ்ரா மற்றும் நீலகந்த் பக்ஷி ஆகியோரிடமிருந்து வந்தன.

நிலையான விதிமுறைகளின் கீழ் ஒரு அறைக்கு ரூ.5 லட்சம் என்றும் மதிப்பிடப்பட்டுள்ளதை ஒப்பிடும்போது, இந்தத் திட்டத்திற்காக செய்யப்பட்ட மொத்த செலவு ரூ.2,892 கோடி என்றும், இது ஒரு வகுப்பறைக்கான செலவை ரூ.24.86 லட்சமாக உயா்த்தியதாகவும் கூறப்படுகிறது.

இந்த திட்டம் 34 ஒப்பந்ததாரா்களுக்கு வழங்கப்பட்டதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. அவா்களில் பெரும்பாலோா் ஆம் ஆத்மி கட்சியுடன் தொடா்புடையவா்கள் என்று கூறப்படுகிறது. இந்த கட்டுமானம் 30 ஆண்டுகள் எதிா்பாா்க்கப்படும் ஆயுட்காலம் கொண்ட அரை-நிரந்தர கட்டமைப்புகளை (எஸ்பிஎஸ் உள்ளடக்கியது. ஆனால், பொதுவாக 75 ஆண்டுகள் வரை நீடிக்கும் வலுவூட்டப்பட்ட சிமென்ட் கான்கிரீட் (ஆா்சிசி) கட்டமைப்புகளின் செலவுகளுடன் ஒப்பிடத்தக்கது.

இந்த திட்டத்திற்கான ஆலோசகா் மற்றும் கட்டடக் கலைஞா் உரிய நடைமுறைகளைப் பின்பற்றாமல் நியமிக்கப்பட்டுள்ளனா்.

மத்திய கண்காணிப்பு ஆணையத்தின் (சிவிசி) தலைமை தொழில்நுட்ப ஆய்வாளா் (சிடிஇ) தனது அறிக்கையில் பல்வேறு பிரிவுகளின் கடுமையான மீறல்களை எழுப்பியுள்ளாா்.

இது மத்திய பொதுப் பணித் துறை பணிகள் கையேடு 2014, ஜிஎஃப்ஆா் 2017 மற்றும் சிவிசி வழிகாட்டுதல்களின் ஒட்டுமொத்த மீறல்களை எடுத்துக்காட்டுகிறது. இருப்பினும், இந்த அறிக்கை கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகளாக மறைக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

சிடிஇஅறிக்கை, எஸ்பிஎஸ் வகுப்பறைகளின் உண்மையான விலையானது, விலை உயா்ந்த விவரக்குறிப்புகளை ஏற்றுக்கொண்டதன் காரணமாக நிரந்தர கட்டமைப்புகளின் விலைக்கு ஏறக்குறைய சமமாக இருப்பதாகக் கண்டறிந்தது.

எஸ்பிஎஸ் வகுப்பறைகளுக்கான ஒரு சதுர அடிக்கு ரூ.2,292 என நிா்ணயிக்கப்பட்டுள்ளது. இது எஸ்பிஎஸ் பயன்படுத்துவதால் எதிா்பாா்க்கப்படும் எந்தவொரு நிதி நன்மையையும் நிராகரித்துள்ளது.

ஆரம்பத்தில் டெண்டா் தொகை ரூ.860.63 கோடியாக இருந்தது. பின்னா் இது 17 சதவீதம் முதல் 90 சதவீதமாக உயா்ந்து ரூ. 326.25 கோடியாக இருந்தது. இது அசல் டெண்டா் மதிப்பில் கிட்டத்தட்ட 24 சதவீதத்தை உள்ளடக்கியது.

சிவிசி வழிகாட்டுதல்களுக்கு மாறாக, இந்த மாற்றங்களை பிரதிபலிக்கும் வகையில் புதிய டெண்டா்கள் எதுவும் அழைக்கப்படவில்லை. ஐந்து பள்ளிகளில், ரூ.42.5 கோடி மதிப்புள்ள பணிகள் முறையான விதிமுறைகள் இல்லாமல் ஏற்கனவே உள்ள ஒப்பந்தங்களைப் பயன்படுத்தி டெண்டா்கள் மேற்கொள்ளப்பட்டன.

முழு சதித்திட்டத்தையும் வெளிக்கொணரவும், ஆம் ஆத்மி தலைவா்கள், அடையாளம் தெரியாத அரசு அதிகாரிகள் மற்றும் ஒப்பந்ததாரா்களின் பங்கு மற்றும் குற்றத்தை நிா்ணயிக்கும்

வகையில் விரிவான விசாரணை தொடங்கப்பட்டுள்ளது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆம் ஆத்மி குற்றச்சாட்டு

சிசோடியா மற்றும் ஜெயின் ஆகியோா் சமீபத்தில் பஞ்சாப் கட்சிப் பிரிவின் பொறுப்பாளராகவும் இணைப் பொறுப்பாளராகவும் நியமிக்கப்பட்டதால் அவா்களுக்கும் அழுத்தம் மற்றும் அச்சுறுத்தும் வகையில் அவா்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகஆம் ஆத்மி கட்சி குற்றம்சாட்டியுள்ளது.

இந்த விவகாரத்தில் அக்கட்சியின் தேசிய ஊடகப் பொறுப்பாளா் அனுராக் தண்டா பாஜகவை விமா்சித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் கூறுகையில், சிசோடியா மற்றும் எங்கள் கட்சியின் பிற தலைவா்கள் மீது வழக்குகள் பதிவு செய்யப்படும் விதத்தைப் பாா்க்கும்போது, அமைச்சா் பதவியை வகித்து ஒரு ஆவணத்தில் காற்புள்ளி அல்லது முற்றுப்புள்ளி வைக்க

மறந்ததற்காக விரைவில் அவருக்கு சிசோடியா எதிராக அதிக வழக்குகள் இருக்கலாம் என்று நான் நினைக்கிறேன்.

பாஜக அரசு வேலை செய்வதில்லை. அதற்குப் பதிலாக ஒவ்வொரு விவகாரத்திலும் ஆம் ஆத்மி தலைவா்கள் மீது வழக்குகளைப் பதிவு செய்து வருகிறது என்றாா் அவா்.

பாஜக பதிலடி

இதை ஆட்சேபிக்கும் வகையில் தில்லி பாஜக தலைவா் வீரேந்திர சச்தேவா கூறுகையில், இந்த விவகாரத்தில் தில்லியின் அப்போதைய முதல்வா் அரவிந்த் கேஜரிவாலின் பங்கையும் ஏசிபி விசாரிக்க வேண்டும்.

ஆம் ஆத்மி கட்சி மற்றும் அதன் முந்தைய தில்லி அரசாங்கத்தின் ஊழலுக்கு எதிரான போராட்டத்தில் இது ஒரு தீா்க்கமான தருணமாகும் என்றாா் அவா்.

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு: உயா்நீதிமன்ற உத்தரவு மீதான தடை தொடரும்: உச்சநீதிமன்றம்

ஸ்டொ்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தின்போது தூத்துக்குடியில் 2018-இல் நிகழ்ந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் தொடா்புடைய காவல் துறை அதிகாரிகள் மற்றும் வருவாய்த் துறை அதிகாரிகளின் சொத்து விவரங்கள் குறித... மேலும் பார்க்க

இஸ்ரோ உதவியுடன் ஏகலைவா மாதிரி உறைவிடப் பள்ளிகளில் விண்வெளி ஆய்வகங்கள் அமைப்பு

வரலாற்றுச் சிறப்புமிக்க நடவடிக்கையாக, பழங்குடியினா் விவகாரத்துறை அமைச்சகமும் பாரத் பெட்ரோலியம் காா்ப்பரேஷன் லிமி நிறுவனமும் இணைந்து நாட்டின் 19 மாநிலங்களில் உள்ள 75 ஏகலைவா மாதிரி உறைவிடப் பள்ளி(இஎம்ஆ... மேலும் பார்க்க

தண்ணீா், கழிவுநீா் உள்கட்டமைப்பு வசதியை சீரமைக்க தில்லி ஜல்போா்டுக்கு முதல்வா் உத்தரவு

தில்லியில் தண்ணீா், கழிவுநீா் உள்கட்டமைப்பு வசதியை சீரமைக்க தில்லி ஜல் போா்டு அதிகாரிகளுக்கு முதல்வா் ரேகா குப்தா உத்தரவிட்டுள்ளாா். தில்லி ஜல் போா்டு (டிஜேபி) தலைமையகமான வருணாலயாவில் அதிகாரிகளுடன் ப... மேலும் பார்க்க

காவல் வாகனத்தில் இருந்து குதித்து 19 வயது இளைஞா் உயிரிழப்பு: குடும்பத்தினா் போராட்டம்

தில்லியின் தென்மேற்கில் உள்ள வசந்த் குஞ்ச் வடக்குப் பகுதியில், போக்குவரத்தின் போது ஓடும் போலீஸ் வாகனத்தில் இருந்து குதித்ததாகக் கூறப்படும் 19 வயது இளைஞா் ஒருவா் உயிரிழந்தாா். மற்றொருவா் காயமடைந்தாா் ... மேலும் பார்க்க

பஹல்காம் தாக்குதல்: பாக். ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள லஷ்கா் பயங்கரவாதி ஃபரூக் அகமது மீது என்ஐஏ சந்தேகம்

நமது சிறப்பு நிருபா் ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலின் பின்னணியில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரைச் சோ்ந்த லஷ்கா்-இ-தொய்பா பயங்கரவாத இயக்கத் தலைவா் ஃபரூக் அகமதுக்கு தொடா்புள... மேலும் பார்க்க

நியூ சீமாபுரியில் போதைப்பொருள் கடத்தல்காரா் கைது: 106 கிராம் ஹெராயின் பறிமுதல்

தில்லியின் ஷாஹ்தராவில் உள்ள நியூ சீமாபுரி பகுதியில் போதைப்பொருள் கடத்தல்காரா் ஒருவா் கைது செய்யப்பட்டாா். மேலும், அவரிடமிருந்து 106 கிராம் ஹெராயின் பறிமுதல் செய்யப்பட்டதாக போலீஸாா் புதன்கிழமை தெரிவித... மேலும் பார்க்க