புலிப்பல் டாலர் அணிந்திருந்ததால் மலையாள ராப்பர் கைது; "பட்டியலினத்தவர் என்பதால்?...
வர்த்தக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை குறைந்தது!
நாட்டில் வர்த்தகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை ரூ. 15.50 குறைந்துள்ளது. அதன்படி, சென்னையில் வர்த்தகப் பயன்பாட்டுக்கான 19 கிலோ சிலிண்டர் விலை ரூ.1,906 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
கச்சா எண்ணெய் விலை உயரும்போது சமையல் எரிவாயு உருளையின் விலை உயா்வது வாடிக்கையாக உள்ளது. சா்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை, அமெரிக்க டாலருக்கு நிகராக இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றைக் கணக்கில் கொண்டு, எண்ணெய் நிறுவனங்கள் சமையல் எரிவாயு உருளையின் விலையை மாதம்தோறும் முதல் நாள் மாற்றி அமைத்து வருகின்றன.
அதன்படி வர்த்தக பயன்பாட்டுக்கான மற்றும் வீட்டு உபயோகத்திற்கான சிலிண்டர் விலை ஏற்ற இறக்கமாக இருந்து வந்தது.
நாகை-காங்கேசன்துறை கப்பல் போக்குவரத்து கட்டணம் குறைப்பு
இந்த நிலையில், வர்த்தகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை மாற்றத்தை வியாழக்கிழமை (மே.1) காலை எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ளன. அதன்படி, 19 கிலோ எடை கொண்ட வர்த்தக பயன்பாட்டுக்கான சிலிண்டரின் விலை ரூ. 15.50 உயர்த்தப்பட்டு ரூ.1,906 ஆக விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இந்த விலை குறைவானது இன்றிலிருந்து (மே.1) அமலுக்கு வருகிறது என எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளது.
வீட்டு சமையல் எரிவாயு உருளை விலையில் மாற்றமில்லை
எனினும், வீடுகளில் பயன்படுத்தக்கூடிய 5 கிலோ, 10 கிலோ, 14.2 கிலோ சமையல் எரிவாயு உருளையின் விலையில் எந்த மாற்றமின்றி ரூ.868.50 ஆகவே நீடிக்கிறது.