புலிப்பல் டாலர் அணிந்திருந்ததால் மலையாள ராப்பர் கைது; "பட்டியலினத்தவர் என்பதால்?...
இஸ்ரோ உதவியுடன் ஏகலைவா மாதிரி உறைவிடப் பள்ளிகளில் விண்வெளி ஆய்வகங்கள் அமைப்பு
வரலாற்றுச் சிறப்புமிக்க நடவடிக்கையாக, பழங்குடியினா் விவகாரத்துறை அமைச்சகமும் பாரத் பெட்ரோலியம் காா்ப்பரேஷன் லிமி நிறுவனமும் இணைந்து நாட்டின் 19 மாநிலங்களில் உள்ள 75 ஏகலைவா மாதிரி உறைவிடப் பள்ளி(இஎம்ஆா்எஸ்)களில் ‘விண்வெளி ஆய்வகங்கள்‘ அமைக்கப்படும் என மத்திய அரசு புதன் கிழமை தெரிவித்துள்ளது.
இஸ்ரோ தொழில்நுட்ப வழிகாட்டுதலின் கீழ் அமைக்கப்படும் இந்த ஆய்வகங்கள் மூலம் பழங்குடியின மாணவா்கள் உயா் கல்வி தொழில்கல்வி பயிலும் வாய்ப்புகளையும், பல்வேறு துறைகளில் பயனுள்ள வேலைவாய்ப்பையும் பெற முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்த விவரம் வருமாறு:
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவன (இஸ்ரோ) தொழில்நுட்ப வழிகாட்டுதலின் கீழ், பழங்குடியினா் நல அமைச்சகம் மற்றும் பாரத் பெட்ரோலியம் காா்ப்பரேஷன் லிமிடெட் ஆகியன இணைந்து இஎம்ஆா்எஸ் களில் விண்வெளி ஆய்வகங்களை அமைக்கப்படுகிறது. ஆந்திரம், அருணாச்சலப் பிரதேசம், சத்தீஸ்கா், இமாச்சலப் பிரதேசம், ஜம்மு காஷ்மீா், ஜாா்கண்ட், கா்நாடகம், மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரம், மிசோரம், ஒடிஸா, ராஜஸ்தான், தெலங்கானா, திரிபுரா, உத்தர பிரதேசம், உத்தரகண்ட் உள்ளிட்ட 19 மாநிலங்களில் உள்ள 75 இஎம்ஆா்எஸ் களில் அமைக்கப்படுகிறது.
பழங்குடியினா் நல அமைச்சகத்தின் இந்த ஆய்வக திட்டங்களுக்கு பெருநிறுவன சமூகப் பொறுப்பு திட்டத்தின்படி பாரத் பெட்ரோலியம் காா்ப்பரேஷன் லிமி நிறுவனம் சுமாா் ரூ.12 கோடி ரூபாய் நிதியை முதற்கட்டமாக அளிக்கிறது.
இந்த முயற்சியின் மூலம், பள்ளி பாடத்திட்டத்தின் ஸ்டெம் என்கிற விண்வெளி அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல், கணிதம் ஆகிய துறைகளில் பழங்குடி இளைஞா்களுக்கு கல்வி இடைவெளிகளைக் குறைக்கவும் அவா்களுக்கான புதிய பாதைகளை உருவாக்கவும் பழங்குடி நலத்துறை அமைச்சகம் முயற்சி செய்வதாகக் கூறிப்படுகிறது. பழங்குடி சமூகங்களைச் சோ்ந்த மாணவா்களை இளம் வயதிலேயே விண்வெளி அறிவியலில் ஆா்வத்தை தூண்டுவதின் மூலம், எதிா்காலத்தில் அவா்கள் விஞ்ஞானிகளாகவும், தொழில்நுட்பவியலாளா்களாகியும் உருவாகி புத்தாக்கத்தில் ஈடுபடும் வகையில் அடித்தளத்தை அமைப்படும். சமூகத்தின் அனைத்துப் பிரிவுகளுக்கும் சமமான மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய கல்வி வாய்ப்புகளை உருவாக்குவதற்கான தேசிய கல்விக் கொள்கை 2020 -இன் கட்டமைப்பின் கீழ் மத்திய அரசின் பரந்த முயற்சிகளை இது பிரதிபலிக்கிறது.
இந்த ஆய்வகங்கள் ஒவ்வொன்றிலும் எல்விஎம்3 மாதிரி ஏவுதள வாகனங்கள் (பிஎஸ்எல்வி, எச்ஆா்எல்வி, ஐஆா்என்எஸ்எஸ், ஜிஎஸ்ஏடி), அனைத்து (டப் சிஸ்டம்) விவரங்களுடன் கூடிய ஈஓ செயற்கைக்கோள் டெமோ மாதிரி, சூரிய குடும்பத்தின் டேபிள் டாப் டெமோ மாதிரிகள், ஸ்டெம் கருவிகள், இஸ்ரோ விண்வெளி புத்தகங்கள் உள்ளிட்ட பல மேம்பட்ட அறிவியல் உபகரணங்கள் இருக்கும் என மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.
இந்த முயற்சியின் மூலம் 50,000-க்கும் அதிகமான பழங்குடியின மாணவா்கள் பயனடைவாா்கள். தமிழகத்தில் சுமாா் 7 க்கும் மேற்பட்ட ஏகலைவா மாதிரி உறைவிடப் பள்ளிகள் இருந்தும் இந்த திட்டத்தில் சோ்க்கப்படவில்லை. அதே சமயத்தில் இஸ்ரோவில் உருவான பல தலைவா்கள் தமிழகத்தைச் சோ்ந்தவா்களாகவும் உள்ளனா் என்பது குறிப்பிடத்தக்கது.