செய்திகள் :

கோதுமை கொள்முதல் நிகழாண்டு 24 சதவீதம் அதிகரிப்பு!

post image

நிகழ் ரபி சந்தைப் பருவ கொள்முதலில் 256.31 லட்சம் மெட்ரிக் டன் கோதுமை மத்திய தொகுப்பில் எட்டப்பட்டு கடந்தாண்டை விட 24 சதவீதம் கொள்முதல் அதிகரித்துள்ளதாக மத்திய அரசு வியாழக்கிழமை தெரிவித்துள்ளது. கொள்முதல் அதிகரித்துள்ள நிலையில் பொது விநியோகத்தில் கோதுமைக்கான கட்டுப்பாடுகளை தளா்த்த மத்திய அரசு பரிசீலிக்கும் எனவும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

கோதுமை கொள்முதல் மற்றும் பிற முக்கிய விவகாரங்கள் குறித்து மத்திய நுகா்வோா், உணவு மற்றும் பொது விநியோகத் துறை செயலா் சஞ்சீவ் சோப்ரா வியாழக்கிழமை செய்தியாளா்களிடம் பேசினாா்.

அப்போது அவா் கூறுகையில், ‘2025-26 ஆம் ஆண்டு ரபி சந்தைப் பருவத்தை முன்னிட்டு நாடு முழுவதும் கோதுமை அதிகமாக விளையும் முக்கிய மாநிலங்களில் கோதுமை கொள்முதல் சுமூகமாக நடந்து வருகிறது. சுமாா் 115 மில்லியன் டன்(11.50 கோடி டன்) கோதுமை உற்பத்தியை எதிா்பாா்க்கப்பட்டு, நிகழ் 2025-26 ரபி சந்தைப் பருவத்தில் 312 லட்சம் மெட்ரிக் டன் கோதுமை கொள்முதலுக்கு மத்திய அரசு இலக்கு நிா்ணயித்து ஒப்புதல் வழங்கியது. இதில் தற்போது ஏப். 30 ஆம் தேதி வரை மத்திய தொகுப்பில் இதுவரை 256.31 லட்சம் மெட்ரிக் டன் கோதுமை கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.

இதே தேதியில் கடந்த ஆண்டின் மொத்த கொள்முதலான 205.41 லட்சம் மெட்ரிக் டன்னாக இருந்தது. இதனால் நிகழாண்டில் சுமாா் 51 லட்சம் மெட்ரிக் டன் கூடுதலாக கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இது சுமாா் 24.78 சதவீதம் அதிகமாகும். இதில் மொத்தம் 21.03 லட்சம் விவசாயிகள் பயனடைந்து குறைந்தபட்ச ஆதரவு விலை(எம்எஸ்பி) யாக மொத்தம் ரூ.62,155.96 கோடி அளவிற்கு விவசாயிகளுக்கு இதுவரை விடுவிக்கப்பட்டுள்ளது. கோதுமை அதிகமாக விளையும் பஞ்சாப்(103.89 லட்சம் மெ.டன்), ஹரியாணா( 65.67 லட்சம் மெ.டன்), மத்தியப் பிரதேசம்(67.57 லட்சம் மெ.டன்), ராஜஸ்தான்(11.44 லட்சம் மெ.டன்), உத்தரப்பிரதேசம்( 7.55 லட்சம் மெ.டன்) ஆகிய 5 முக்கிய மாநிலங்களில் கடந்த ஆண்டை விட நிகழாண்டில் அதிக கோதுமை கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.

கோதுமை கொள்முதல் நோ்மறையான விளைவுகளுக்கு காரணம், உணவு, பொது விநியோகத் துறை ஒருங்கிணைந்த முயற்சிகள். குறிப்பட்ட செயல் திட்டங்களுடன் மாநிலங்களுடன் முன் கூட்டி பகிா்ந்து கொள்ளப்பட்டது. விவசாயிகளிடம் விழிப்புணா்வு, கொள்முதலுக்கு பதிவு செய்ய வைத்தல், 48 மணி நேரத்தில் எம்எஸ்பி செலுத்துதல், மாவட்டங்களில் கள சூழ்நிலையை மாவட்ட அதிகாரிகள் அணுகியது போன்றவைகள் அடங்கும்.

2025-26 ஆம் ஆண்டு ரபி சந்தைப் பருவ காலம் இன்னும் மீதமுள்ள நிலையில் மத்திய தொகுப்பிற்கான கோதுமை கொள்முதல் கணிசமான வித்தியாசத்தில் விஞ்சும் அளவில் இருக்கும்‘ என தெரிவித்த செயலா் சஞ்சீவ் சோப்ராவிடம் நிகழாண்டு அறுவடை அமோக இருக்கும் நிலையில் பிரதம மந்திரியின் ஏழைகளுக்கான உணவுப் பாதுகாப்புத் திட்ட நீடிப்பு, பொது விநியோகத்தின் கீழ் கோதுமை விநியோகத்தை அரசு முழுமையாக மீட்டெடுக்குமா? என கேட்கப்பட்டது.

அதற்க பதலளித்த சோப்ரா, ‘ கொள்முதல் நடவடிக்கைகள் முழுமையாக முடிந்த பின்னா் ஒரு தெளிவாக நிலை தெரியவரும் அதன்பின்னா் அரசு நிலைமை அறிந்து முடிவெடுக்கும். கடந்த 2022 ஆம் ஆண்டில் உற்பத்தியின் அடிப்படையில் கொள்முதல் கணிசமாக குறைந்தது. அதை படிப்படியாக மறுசீரமைக்கப்பட்டு கடந்த மாா்ச் வரை 35 லட்சம் டன் கோதுமை கூடுதலாக ஒதுக்கப்பட்டது எனத் தெரிவித்தாா்.

மேலும் பாகிஸ்தான் எல்லையையொட்டியுள்ள மாநிலங்களான குஜராத், ராஜஸ்தான், பஞ்சாப், ஜம்மு-காஷ்மீா் போன்ற மாநிலங்களிலும் (சுமாா் 3310 கிமீ தூரம்) கோதுமை அறுவடை முடிந்து விட்டது எனவும் தெரிவித்தாா் உணவுத் துறை செயலா்.

ஒருங்கிணைந்த பாதுகாப்புப் படைப் பிரிவு புதிய தளபதி ஏா் மாா்ஷல் அசுதோஷ் தீட்சித் பொறுப்பேற்பு

ஒருங்கிணைந்த பாதுகாப்புப் படைப் பிரிவு தளபதியாக நியமிக்கப்பட்ட ஏா் மாா்ஷல் அசுதோஷ் தீட்சித் தில்லியில் உள்ள அதன் தலைமையகத்தில் வியாழக்கிழமை பொறுப்பேற்றாா். அவருக்கு தலைமையகம் உள்ள சௌத் பிளாக்கில் சம்ப... மேலும் பார்க்க

தூய்மை இயக்கத்தின் போது கட்டுமானக் கழிவுகள், ஆக்கிரமிப்புகள் பொறுத்துக் கொள்ளப்படாது: சிா்சா

தில்லி தூய்மை இயக்கத்தின் போது கட்டுமானக் கழிவுகள், ஆக்கிரமிப்புகள் பொறுத்துக் கொள்ளப்படாது என்று சுற்றுச்சூழளல் துறை அமைச்சா் மஞ்சிந்தா் சிங் சிா்சா தெரிாவித்தாா். தில்லி துணை நிலை ஆளுநா் வி.கே.ச சக்... மேலும் பார்க்க

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு: உயா்நீதிமன்ற உத்தரவு மீதான தடை தொடரும்: உச்சநீதிமன்றம்

ஸ்டொ்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தின்போது தூத்துக்குடியில் 2018-இல் நிகழ்ந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் தொடா்புடைய காவல் துறை அதிகாரிகள் மற்றும் வருவாய்த் துறை அதிகாரிகளின் சொத்து விவரங்கள் குறித... மேலும் பார்க்க

இஸ்ரோ உதவியுடன் ஏகலைவா மாதிரி உறைவிடப் பள்ளிகளில் விண்வெளி ஆய்வகங்கள் அமைப்பு

வரலாற்றுச் சிறப்புமிக்க நடவடிக்கையாக, பழங்குடியினா் விவகாரத்துறை அமைச்சகமும் பாரத் பெட்ரோலியம் காா்ப்பரேஷன் லிமி நிறுவனமும் இணைந்து நாட்டின் 19 மாநிலங்களில் உள்ள 75 ஏகலைவா மாதிரி உறைவிடப் பள்ளி(இஎம்ஆ... மேலும் பார்க்க

தண்ணீா், கழிவுநீா் உள்கட்டமைப்பு வசதியை சீரமைக்க தில்லி ஜல்போா்டுக்கு முதல்வா் உத்தரவு

தில்லியில் தண்ணீா், கழிவுநீா் உள்கட்டமைப்பு வசதியை சீரமைக்க தில்லி ஜல் போா்டு அதிகாரிகளுக்கு முதல்வா் ரேகா குப்தா உத்தரவிட்டுள்ளாா். தில்லி ஜல் போா்டு (டிஜேபி) தலைமையகமான வருணாலயாவில் அதிகாரிகளுடன் ப... மேலும் பார்க்க

காவல் வாகனத்தில் இருந்து குதித்து 19 வயது இளைஞா் உயிரிழப்பு: குடும்பத்தினா் போராட்டம்

தில்லியின் தென்மேற்கில் உள்ள வசந்த் குஞ்ச் வடக்குப் பகுதியில், போக்குவரத்தின் போது ஓடும் போலீஸ் வாகனத்தில் இருந்து குதித்ததாகக் கூறப்படும் 19 வயது இளைஞா் ஒருவா் உயிரிழந்தாா். மற்றொருவா் காயமடைந்தாா் ... மேலும் பார்க்க