வருமான வரி கணக்குத் தாக்கல்... இந்த விஷயங்களைத் தவறவிட்டால் நோட்டீஸ் வரும்... உஷ...
மே நாள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து
முதல்வர் மு.க.ஸ்டாலின் மே நாள் வாழ்த்துச் செய்தியை வெளியிட்டுள்ளார்.
அதில் அவர் தெரிவித்திருப்பதாவது:
உலகினை உழைப்பால் செலுத்தும், உலகினுக்குத் தங்கள் வியர்வையால் உயிரூட்டும் பாட்டாளி வர்க்கத்தினருக்கு எனது உழைப்பாளர் நாள் வாழ்த்துகள்.
உழைப்பாளர்களுக்காக மே நாளில் சம்பளத்துடன் கூடிய விடுமுறை, சென்னையில் மே நாள் பூங்கா, தொழிலாளர் நல வாரியம் என எண்ணற்ற பங்களிப்புகளை திமுக ஆட்சிதோறும் அண்ணா, கலைஞர் செய்து வந்தனர். அப்பெருந்தலைவர்களின் வழி நடக்கும், நமது திராவிட மாடல் அரசு பொறுப்பேற்றதில் இருந்து ஏராளமான, இந்தியாவுக்கே வழிகாட்டும் பல தொழிலாளர் நலடத்திட்டங்களைச் செய்து வருகிறது.
உழைப்பாளர்களின் நலன் காக்கும் நமது முயற்சிகள் தொடரும், ஆதிக்கமற்ற சமுதாயம் அமைத்தே தீருவோம்! அதற்கு இந்த மே நாள் மேலும் நமக்கு ஊக்கத்தினை வழங்கட்டும் என முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.