கும்பம்: `வழக்குகள் வேண்டாம்; என்ன காத்திருக்கிறது?' - ராகு கேது தரும் பலன்கள்
மே மாதத்தில் அறிமுகமாகும் ஸ்மார்ட்போன்கள்!
மே மாதத்தில் அறிமுகமாகவுள்ள ஸ்மார்ட்போன்கள் குறித்த அறிவிப்புகள் வெளியாகியுள்ளன.
ஒன்பிளஸ், சாம்சங், ரியல்மீ உள்ளிட்ட நிறுவனங்களில் இருந்து புதிய மற்றும் மேம்படுத்தப்பட்ட ஸ்மார்ட்போன்கள் அறிமுகமாகின்றன.
மே மாதத்துக்கு கோடைக்கால விடுமுறையால் மட்டுமல்லாமல், புதிய பிராண்டுகளின் ஸ்மார்ட்போன்கள் அறிமுகத்தாலும் உற்சாகம் கூடியுள்ளது.
புதிய ஸ்மார்ட்போன்களை வாங்க வேண்டும் என நினைப்பவர்களுக்கு, ஸ்மார்ட்போன்களில் மேம்படுத்தப்பட்ட அம்சங்களைப் பயன்படுத்த ஆர்வமுடையவர்களுக்கு இம்மாதம் வெளியாகும் ஸ்மார்ட்போன்களை பரிந்துரை செய்யலாம்.
இம்மாதம் வெளியாகும் ஸ்மார்ட்போன்கள் குறித்து காணலாம்.
சாம்சங் கேலக்ஸி எஸ் 25 எட்ஜ்
தென் கொரியாவைச் சேர்ந்த சாம்சங் நிறுவனம் கேலக்ஸி எஸ் 25 எட்ஜ் என்ற மேம்படுத்தப்பட்ட புதிய ஸ்மார்ட்போனை ஏப்ரல் மாதத்தில் அறிமுகப்படுத்தும் என எதிர்பார்க்கப்பட்டது. பின்னர் இந்த நிகழ்வு மே மாதத்தில் நடக்கும் எனக் கூறப்பட்டது.
இந்நிலையில் மே 13ஆம் தேதி வெளியாகும் எனத் தகவல் வெளியாகியுள்ளது. இன்னும் அந்நிறுவனத்தில் இருந்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை.
சாம்சங் கேலக்ஸி எஸ் 25 எட்ஜ் ஸ்மார்ட்போனானது 6.6 அங்குல அமோலிட் திரை கொண்டது. திரையில் செயலிகளை சுமூகமாகப் பயன்படுத்தும் வகையில் 120Hz திறன் வழங்கப்பட்டுள்ளது.
இந்த ஸ்மார்ட்போனின் சிறப்பம்சமாக குறைந்த எடையைக் கூறலாம். 5.8 மி.மீ. தடிமனில் உருவாக்கப்பட்டுள்ளதால், சாம்சங்கில் மற்ற ஸ்மார்ட்போன்களைக் காட்டிலும் எடை குறைவானது. இதனால் பயன்படுத்துவதற்கு இலகுவாக இருக்கும்.
3,900 mAh பேட்டரி திறனுடன் 25W சார்ஜிங் திறன் கொண்டது. இதன் விலை குறித்து இன்னும் அறிவிக்கப்படவில்லை.
ஒன்பிளஸ் 13எஸ்
மிகுந்த எதிர்பார்ப்புக்குப் பிறகு ஒன்பிளஸ் 13எஸ் ஸ்மார்ட்போனானது மே மாதம் வெளியாகவுள்ளது. இதனை உறுதிப்படுத்தும் விதமாக இதன் சிறப்பம்சங்கள் குறித்த அறிவிப்பை அந்நிறுவனம் வெளியிட்டுள்ளது.
ஒன்பிளஸ் 13எஸ் ஸ்மார்ட்போனானது, இதற்கு முன்பு வெளியான ஒன்பிளஸ் 13டி வகையில் பெரிதாக எந்தவித மாற்றங்களையும் மேற்கொள்ளாமல் இந்தியாவில் அறிமுகமாகவுள்ளது.
ஒன்பிளஸ் 13 வகைகளில் இது மூன்றாவது ஸ்மார்ட்போனாகும். இந்த வரிசையில் ஒன்பிளஸ் 13ஆர்-ம் இடம் பெற்றுள்ளது.
ஒன்பிளஸ் 13எஸ் ஸ்மாட்போனில் ஸ்நாப்டிராகன் 8 எலைட் புராசஸர் வழங்கப்பட்டுள்ளது. 6.32 அங்குலத் திரை கொண்டது. மற்ற ஸ்மார்ட்போன்களைக் காட்டிலும் அளவில் சிறியது. மிகப்பெரிய ஸ்மார்ட்போன்களைப் பயன்படுத்த சிரமம் கொண்டவர்களுக்கு இது பெரிதும் உதவிகரமாக இருக்கும்.
வெள்ளை மற்றும் இளஞ்சிவப்பு என இரு நிறங்களில் தயாரிக்கப்பட்டுள்ளது. இதன் விலை, சந்தை மதிப்பில் ரூ. 55,000 இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
ரியல்மீ ஜிடி 7
ரியல்மீ நிறுவனத்தின் ஜிடி 7 வகை ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகமாகத் தயாராகவுள்ளது. இதற்கு முன்பே இந்த ஸ்மார்ட்போன் குறித்த டீசரை வெளியிட்டு கேம் பிரியர்களை இந்நிறுவனம் கவர்ந்தது.
அதாவது, அதிகபட்சமாக தொடர்ந்து 6 மணிநேரம் கேம் விளையாடினாலும் சிறந்த செயல்திறனை இந்த ஸ்மார்ட்போன் கொண்டுள்ளது. இதேபோன்று இந்த வரிசையில் அடுத்து வரவுள்ள ரியல்மீ ஜிடி 7 ப்ரோவும் இந்தியாவின் சிறந்த கேம் ஸ்மார்ட்போனாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மீடியாடெக் டைமன்சிட்டி 9400+ புராசஸர் கொண்டது. 1TB நினைவகத் திறனும், 16GB உள்நினைவகமும் உடையது.
போகோ எஃப்7
போகோ எஃப்7 ஸ்மார்ட்போனானது மே மாதம் உலகளவில் அறிமுகமாகவுள்ளது. இதனுடன் இதன் மற்றொரு வகையான போகோ எஃப்7 ப்ரோ ஸ்மார்ட்போனும் வெளியாகிறது.
போகோவின் இந்த புதிய எஃப் பிரிவு ஸ்மார்ட்போன், ஸ்நாப்டிராகன் 4ஆம் தலைமுறை புராசஸர் கொண்டது. 6.8 அங்குல அமோலிட் திரை உடையது. அதிகபட்சமாக 16GB உள்நினைவகம் கொண்டது. 7500 mAh பேட்டரி திறனும் 90W வேகமாக சார்ஜ் செய்யும் அம்சமும் வழங்கப்பட்டுள்ளது.
ஐகியூ நியோ 10 ப்ரோ+
சீனாவைத் தலைமையிடமாகக் கொண்ட ஐகியூ நியோ 10 ஆர் ஸ்மார்ட்போன் சமீபத்தில் இந்தியாவில் அறிமுகமானது. இதனைத் தொடர்ந்து இந்தப் பிரிவில் ஐகியூ நியோ 10 ப்ரோ+ ஸ்மார்ட்போன் அடுத்த மாதம் சீனாவில் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.
இதையும் படிக்க | கோடைக் கால விற்பனை: ஸ்மார்ட்போன்களுக்கான சலுகைகள் என்னென்ன?