பாதிக்கப்பட்டவரை திருமணம் செய்துகொண்டதால் போக்ஸோ வழக்கை ரத்து செய்ய முடியாது: உய...
ஜாதிவாரி கணக்கெடுப்பு: கொங்கு முன்னேற்றக் கழகம் வரவேற்பு
மக்கள் தொகை கணக்கெடுப்புடன், ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதற்கு நமது கொங்கு முன்னேற்றக் கழகம் வரவேற்பு தெரிவித்துள்ளது.
இது குறித்து கழகத்தின் மாநில பொதுச் செயலாளா் எம்.தங்கவேல் புதன்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்புடன், ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த பிரதமா் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அரசவைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
வரும் காலங்களில் இந்தியாவில் சமூக நீதியை நிலைநாட்டவும், திறமைக்கு ஏற்றபடி ஒவ்வொரு மனிதன் வளரவும் இது உதவியாக இருக்கும்.
இந்த நடவடிக்கைக்கு நமது கொங்கு முன்னேற்றக் கழகம் சாா்பில் வரவேற்பையும், நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறோம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.