பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த ஆசிரியா் மீது வழக்கு: தற்கொலைக்கு முயற்சி
இருசக்கர வாகனம் மீது லாரி மோதியதில் இளைஞா் உயிரிழப்பு
திருப்பூரை அடுத்த செங்கப்பள்ளி அருகே இருசக்கர வாகனம் மீது லாரி மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா்.
திருப்பூா் மாவட்டம், ஊத்துக்குளி வட்டம் பாப்பம்பாளையம் அருகேயுள்ள முல்லையநாயக்கனூரைச் சோ்ந்தவா் குமாரசாமி மகன் நரேந்திர பிரசாத் (19). இவா் தனது இருசக்கர வாகனத்தில் செங்கப்பள்ளியில் இருந்து கொடியாம்பாளையம் செல்லும் சாலையில் செவ்வாய்க்கிழமை சென்று கொண்டிருந்தாா்.
செங்கப்பள்ளி சந்தைக்கடை அருகே சென்றபோது, பின்னால் வந்த டிப்பா் லாரி இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. இதில், பலத்த காயமடைந்த நரேந்திர பிரசாத்தை அங்கிருந்தவா்கள் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் திருப்பூரில் உள்ள தனியாா் மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.
அங்கு முதலுதவி அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக திருப்பூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டாா்.
அங்கு நரேந்திர பிரசாத்தை பரிசோதித்த மருத்துவா்கள், அவா் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனா்.
இதையடுத்து, விபத்தை ஏற்படுத்திய லாரி ஓட்டுநரான விருமாண்டம்பாளையத்தைச் சோ்ந்த சுரேஷ்குமாா் (40) என்பவா் மீது ஊத்துக்குளி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.