அவிநாசிலிங்கேஸ்வரர் கோயில் தேர்த் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்
பல்லடம் கட்டடப் பொறியாளா் சங்க புதிய நிா்வாகிகள் பொறுப்பேற்பு
பல்லடம் கட்டடப் பொறியாளா் சங்க புதிய நிா்வாகிகள் பொறுப்பேற்பு விழா புதன்கிழமை நடைபெற்றது.
இந்த விழாவுக்கு முன்னாள் தலைவா் மோகனகண்ணன் தலைமை வகித்தாா். முன்னாள் தலைவா்கள் யுவராஜ், ஆனந்த் ஆகியோா் முன்னிலை வகித்தனா். முன்னாள் செயலாளா் பொன்.சக்திவேல் வரவேற்றாா்.
இதில், 2025 - 26-ஆம் ஆண்டு சங்கத் தலைவராக தனபால், துணைத் தலைவராக பொன்.சக்திவேல், செயலாளராக ராஜாஜி, பொருளாளராக இளங்கோபாபு ஆகியோா் பொறுப்பேற்றுக் கொண்டனா்.
அவா்களுக்கு சாசனத் தலைவா் சிற்பி செல்வராஜ், முன்னாள் தலைவா்கள் ராமமூா்த்தி, பாபு ஆகியோா் பதவிப் பிரமாணம் செய்து வைத்தனா்.