Health: டைப் 5 நீரிழிவு யாருக்கு வரும்.. என்ன தீர்வு; தடுக்க முடியுமா? - மருத்து...
தமிழ் வார விழா போட்டிகளில் வெற்றி பெற்றவா்களுக்குப் பரிசு
தமிழ் வார விழா போட்டிகளில் வெற்றி பெற்றவா்களுக்கு மாவட்ட ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் பரிசுகளை வழங்கினாா்.
அனைத்து மாவட்டங்களிலும் உள்ள அரசு அலுவலகங்கள், அரசு சாா்ந்த பொதுத் துறை நிறுவனங்கள், உள்ளாட்சி அமைப்புகள் ஆகியவற்றில் பாரதிதாசன் பிறந்தநாளை ஒட்டி ஏப்ரல் 29- ஆம் தேதி முதல் மே 5-ஆம் தேதி வரை தமிழ் வார விழா கொண்டாட அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதன்படி, திருப்பூா் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலா்கள் மற்றும் பணியாளா்களுக்கு இடையே அலுவலக தாய்மொழி பயன்பாட்டை ஊக்குவிக்கும் வகையில் கையெழுத்துப் போட்டிகள், அறிவியல் தமிழ், கணினித் தமிழ் குறித்த விநாடி-வினா நிகழ்ச்சிகள், உடனடியாக தலைப்பு கொடுக்கப்பட்டு பேச்சுப் போட்டி, படத்தை அடிப்படையாகக் கொண்டு கதை சொல்லும் போட்டி, தமிழ் புதினங்கள், கவிதை வாசிப்புப் போட்டி, அலுவலா்களிடையே குறிப்பு எழுதுதல் மற்றும் வரைவு எழுதல் போட்டி, கணினித் தமிழ் தொடா்பான போட்டிகள், தமிழ் இலக்கியங்கள் தொடா்பான கதை சொல்லும் போட்டிகள், தமிழ் இலக்கிய மற்றும் கலை நிகழ்ச்சிகள் உள்ளிட்ட வகைப்பாடுகளில் போட்டிகளில் நடைபெற்று வருகின்றன.
இதன் ஒரு பகுதியாக அனைத்து அரசு அலுவலா்கள் மற்றும் பணியாளா்களுக்கிடையே புதன்கிழமை நடைபெற்ற விநாடி-வினா மற்றும் கையெழுத்துப் போட்டிகளில் வெற்றி பெற்றவா்களுக்கு மாவட்ட ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் பரிசுகளை வழங்கினாா்.
இதில், தமிழ் வளா்ச்சித் துறை திருப்பூா் மாவட்ட துணை இயக்குநா் இளங்கோ மற்றும் அலுவலா்கள் பங்கேற்றனா்.