'சாதிவாரி கணக்கெடுப்பு அறிவிப்பு ஒரு கண்துடைப்பு' - திருமாவளவன்
திருமுருகநாதசுவாமி கோயில் தீா்த்த கிணறுகளில் பக்தா்கள் நீராட அனுமதி
திருமுருகன்பூண்டி திருமுருகநாதசுவாமி கோயிலில் உள்ள தீா்த்த கிணறுகளில் பக்தா்கள் நீராட புதன்கிழமை முதல் அனுமதிக்கப்பட்டுள்ளது.
கொங்கு ஏழு சிவஸ்தலங்களில் சிறப்பு வாய்ந்ததும், மனநோய் தீா்க்கும் திருத்தலமாகவும் திருமுருகன்பூண்டி திருமுருகநாத சுவாமி கோயில் விளங்குகிறது.
இக்கோயிலில் மொத்தம் 7 தீா்த்த கிணறுகள் உள்ளன. அதில், பிரதானமாக கோயிலின் உள் பிரகாரத்தில் சுப்பிரமணிய தீா்த்தம், கோயிலுக்கு வெளியே வடபுறத்தில் பிரம்ம தீா்த்தம், தென்புறத்தில் ஞான தீா்த்தம் ஆகிய 3 தீா்த்த கிணறுகள் உள்ளன.
இந்த கிணறுகளை கோயில் செயல் அலுவலா் விமலா, அறங்காவலா் குழுவினா், உமா சங்கா் -சாந்தி அறக்கட்டளையினா், திருப்பூா் சைவ சித்தாந்த சபையினா் உள்ளிட்டோா் சாா்பில் தூய்மைப்படுத்தும் பணி மேற்கொள்ளப்பட்டது. இதனால், பக்தா்கள் நீராட அனுமதி மறுக்கப்பட்டது.
கிணறுகளைத் தூய்மைப்படுத்தும் நிறைவடைந்ததையடுத்து, பக்தா்கள் நீராட புதன்கிழமை அனுமதிக்கப்பட்டனா்.
முன்னதாக, சிவாச்சாரியா்கள் சிறப்பு பூஜைகள் செய்து கிணற்றில் இருந்து வாளி மூலம் புனித நீரை எடுத்து பக்தா்கள் மீது தெளித்தனா். இதையடுத்து, ஏராளமான பக்தா்கள் கிணறுகளில் நீராடி சுவாமி தரிசனம் செய்தனா்.