சாதிவாரி கணக்கெடுப்பு: ``2011-ல் நடந்தது போல மீண்டும் நடக்கக் கூடாது" - மநீம தலை...
புழுங்கல் அரிசி ஏற்றுமதி வரி 20% ஆக உயர்வு: மத்திய அரசு
இந்தியாவிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் புழுங்கல் அரிசி மற்றும் உமி நீக்கப்பட்ட சில அரிசி வகைகளுக்கு 20% ஏற்றுமதி வரியை விதித்து மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
உள்நாட்டில் அரிசி விலையை கட்டுப்படுத்தவும் தேவைக்கேற்ப இருப்பு மற்றும் விநியோகத்தை உறுதி செய்யும் வகையில் ஏற்றுமதி வரி விதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
அரிசி ஏற்றுமதியை ஒழுங்குப்படுத்தவும், உள்நாட்டில் உணவு இருப்பை உறுதி செய்யவும் மத்திய நிதித்துறை அமைச்சகம் அறிவித்திருக்கும் இந்த முடிவானது மே 1ஆம் தேதியான இன்று முதல் நடைமுறைக்கு வருகிறது.