செய்திகள் :

4-வது காலாண்டு வருவாய்க்குப் பிறகு பஜாஜ் ஃபைனான்ஸ் பங்குகள் 5% சரிவு!

post image

புதுதில்லி: என்.பி.எப்.சி. நிறுவனமான, பஜாஜ் பைனான்ஸ், மார்ச் 2025 காலாண்டில், அதன் நிகர லாபம், 16 சதவிகிதம் அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளது.

இன்றைய வர்த்தகத்தில், பங்கின் விலையானது மும்பை பங்குச் சந்தையில் 4.99% சரிந்து ரூ.8,635.70 ஆக முடிவடைந்தது. இது பகலில் 5.82 சதவிகிதம் சரிந்து ரூ.8,560 ரூபாயாக இருந்தது. அதே வேளையில் தேசிய பங்குச் சந்தையில் 5.27 சதவிகிதம் சரிந்து ரூ.8,613.50 ஆக முடிந்தது.

இதனையடுத்து, நிறுவனத்தின் சந்தை மதிப்பானது ரூ.28,186.83 கோடி ரூபாய் குறைந்து ரூ.5,36,648.31 கோடி ரூபாயாக உள்ளது.

மார்ச் 31, 2025 வரையான காலாண்டில், பஜாஜ் பைனான்ஸ் நிகர லாபம் 16 சதவிகிதம் அதிகரித்து ரூ.3,940 கோடியாக இருந்தது. கடந்த ஆண்டு அதே காலாண்டில் நிறுவனமானது ரூ.3,402 கோடி நிகர லாபம் பதிவு செய்தது.

2024-25ஆம் நிதியாண்டின் ஜனவரி முதல் மார்ச் வரையான காலாண்டில் நிறுவனத்தின் மொத்த வருவாய் ரூ.12,764 கோடியிலிருந்து அதிகரித்து ரூ.15,808 கோடியானது. நிறுவனத்தின் வட்டி வருமானம் ரூ.11,201 கோடியிலிருந்து அதிகரித்து ரூ.13,824 கோடியானது.

ஒருங்கிணைந்த அடிப்படையில், நிறுவனத்தின் நிகர லாபம் முந்தைய நிதியாண்டின் இதே காலாண்டில் ரூ.3,825 கோடியிலிருந்து 19 சதவிகிதம் அதிகரித்து ரூ.4,546 கோடியானது.

இதையும் படிக்க: அட்சய திருதியை: தங்கம் விற்பனை அமோகம்!

மே 1 முதல் பால் விலையை உயர்த்தும் அமுல்!

பால் உற்பத்தியில் ஈடுபட்டுவரும் அமுல் நிறுவனம், நாளை (மே 1) முதல் பாலின் விலை லிட்டருக்கு ரூ.2 உயர்த்தவுள்ளது.குஜராத் கூட்டுறவு பால் சந்தைப்படுத்தல் கூட்டமைப்பு இதனை உறுதிப்படுத்தியுள்ளது.இதுகுறித்து ... மேலும் பார்க்க

பஞ்சாப்: கோதுமை கொள்முதல் 111 லட்சம் மெட்ரிக் டன்!

சண்டீகா்: தானிய சந்தைகளிலிருந்து 114 லட்சம் மெட்ரிக் டன் கோதுமையில், இதுவரை 111 லட்சம் மெட்ரிக் டன் கோதுமை கொள்முதல் செய்யப்பட்டுள்ளதாக பஞ்சாப் உணவு மற்றும் சிவில் வழங்கல் அமைச்சர் லால் சந்த் இன்று தெ... மேலும் பார்க்க

அட்சய திருதியை: தங்கம் விற்பனை அமோகம்!

புதுதில்லி: அட்சய திருதியை நாளை முன்னிட்டு மக்கள் போட்டி போட்டு கொண்டு தங்க நகைகளை விரும்பி வாங்கி வருகின்றனர்.சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை எந்தவித மாற்றமின்றி ஒரு கிராம் 8,980-க்கும், ஒரு ச... மேலும் பார்க்க

மே மாதத்தில் அறிமுகமாகும் ஸ்மார்ட்போன்கள்!

மே மாதத்தில் அறிமுகமாகவுள்ள ஸ்மார்ட்போன்கள் குறித்த அறிவிப்புகள் வெளியாகியுள்ளன.ஒன்பிளஸ், சாம்சங், ரியல்மீ உள்ளிட்ட நிறுவனங்களில் இருந்து புதிய மற்றும் மேம்படுத்தப்பட்ட ஸ்மார்ட்போன்கள் அறிமுகமாகின்றன.... மேலும் பார்க்க

எல்லையில் நீடிக்கும் பதற்றத்தால் சென்செக்ஸ், நிஃப்டி சரிந்து முடிவு!

மும்பை: புவிசார் அரசியல் பதற்றம் குறித்து அதிகரித்து வரும் கவலைகளுக்கு மத்தியில், இரண்டு நாள் பேரணிக்குப் பிறகு, இன்றைய நிலையற்ற அமர்வில், சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி சரிந்து முடிந்தன.எவ்வாறாயினும், தொ... மேலும் பார்க்க

புதிய அம்சங்களுடன் ஜாவா 42 எஃப்ஜே!

சமீபத்தில் சந்தையில் அறிமுகம் செய்யப்பட்ட ஜாவா 42 எஃப்ஜே பைக்கில் எக்ஸாஸ்ட் மேம்படுத்தப்பட்டுள்ளன.அதாவது பைக்கில் இருந்த இரு எக்ஸாஸ்ட்களில் ஒன்று நீக்கம் செய்யப்பட்டு வெளியாகவுள்ளது.ஜாவா யெஸ்டி நிறுவன... மேலும் பார்க்க