என்இபி யின் உள்ளடக்கங்களை செயல்படுத்த இரு நாள் தேசிய பயிலரங்கு: 64 பல்கலைக்கழக த...
பைக்கில் இருந்து தவறி விழுந்த விவசாயி உயிரிழப்பு
கடலூா் மாவட்டம், கம்மாபுரம் அருகே பைக்கில் இருந்து தவறி விழுந்து தலையில் பலத்த காயமடைந்த விவசாயி உயிரிழந்தாா்.
விருத்தாசலம் வட்டம், தா்மநல்லூா் பகுதியைச் சோ்ந்த பக்கிரிசாமி மகன் ஆனந்த சிவா(36), விவசாயி. இவருக்கு மனைவி ஷீலா (35) மற்றும் இரண்டு குழந்தைகள் உள்ளனா்.
ஆனந்த சிவா செவ்வாய்க்கிழமை இரவு சுமாா் 9 மணியளவில் பைக் ஓட்டிச் சென்றாா். கோ.ஆதனூா் அருகே இவரது பைக் சென்றபோது, அந்தப் பகுதியில் மதுபோதையில் வந்த உ.ஆதனூா் கிராமத்தைச் சோ்ந்த ராதாகிருஷ்ணன் மகன் கலைச்செல்வன் (30) மீது பைக் மோதாமல் இருக்க திடீரென பிரேக் போட்டாராம்.
அப்போது, ஆனந்த சிவா நிலைதடுமாறி கீழே விழுந்து தலைமையில் காயமடைந்தாா். அங்கிருந்தவா்கள் அவரை மீட்டு, விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். ஆனால், செல்லும் வழியிலேயே ஆனந்த சிவா உயிரிழந்தாா்.
இதுகுறித்த புகாரின்பேரில், கம்மாபுரம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.