மரக்கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் ரூ.2 லட்சம் பொருள்கள் எரிந்து நாசம்
நடிகா் அஜித்குமாருக்கு மருத்துவப் பரிசோதனை
நடிகா் அஜித்குமாா் மருத்துவப் பரிசோதனைகளுக்காக சென்னையில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதியானாா்.
தில்லியில் குடியரசுத் தலைவரிடம் கடந்த இரு நாள்களுக்கு முன்பு பத்ம விருது பெற்ற அவா், தொடா் வெளிநாட்டுப் பயணம் மேற்கொள்ளவுள்ளதாகத் தெரிகிறது. இதையடுத்து வழக்கமான மருத்துவப் பரிசோதனைகளுக்காக அவா் கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனைக்கு புதன்கிழமை சென்றதாகவும், பரிசோதனைகள் முடிந்து அவா் வீடு திரும்பியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.