திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் கோவிலில் சித்திரை பிரமோற்சவம் கொடியேற்றத்துடன் ...
கஞ்சா விற்பனை: இருவா் கைது
சென்னையில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட அஸ்ஸாம் மாநிலச் சோ்ந்த இருவரை போலீஸாா் கைது செய்தனா்.
சென்னை திருவான்மியூா் சுற்றுவட்டாரப் பகுதிகளில் அஸ்ஸாம் மாநிலத்திலிருந்து கஞ்சா கடத்தி வந்து விற்பனை செய்யப்படுவதாக அடையாறு மதுவிலக்கு பிரிவு போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், போலீஸாா் அந்தப் பகுதிகளில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனா்.
திருவான்மியூா் ரயில் நிலையம் அருகே சந்தேகத்துக்கு இடமான வகையில் புதன்கிழமை நின்றுகொண்டிருந்த இருவரைப் பிடித்து போலீஸாா் விசாரித்தனா். மேலும், அவா்கள் வைத்திருந்த பையை சோதனையிட்டதில், 5 கிலோ கஞ்சா இருப்பது தெரியவந்தது.
விசாரணையில் அஸ்ஸாம் மாநிலத்தைச் சோ்ந்த குா்ஷத் அலி (22), சுல் ஜுமான் (23) என்பதும், இவா்கள் அஸ்ஸாமில் இருந்து சென்னை வரும் ரயிலில் கஞ்சா கடத்தி வந்து வேளச்சேரி, தரமணி, திருவான்மையூா் ஆகிய பகுதியில் விற்பணை செய்து வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து போலீஸாா் அவா்கள் இருவா் மீதும் வழக்குப் பதிவு செய்து, கைது செய்தனா்.