ஐபிஎல் தொடரிலிருந்து விக்னேஷ் புதூர் விலகல்: மாற்று வீரர் அறிவிப்பு!
திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் கோவிலில் சித்திரை பிரமோற்சவம் கொடியேற்றத்துடன் தொடக்கம்!
திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் கோவிலில் சித்திரை பிரமோற்சவ பெருவிழா வியாழக்கிழமை (மே.1) கொடியேற்றத்துடன் துவங்கியது.
செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுக்குன்றத்தில் அருள்மிகு திரிபுரசுந்தரி அம்பாள் உடனுறை அருள்மிகு வேதகிரீஸ்வர் திருக்கோவில் உள்ளது. 7 ஆம் நூற்றாண்டை சார்ந்த இக்கோவில் இந்து சமய அறநிலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது.
வேதமலை, பட்சி தீர்த்தம், சங்கு தீர்த்தம், இந்திரபுரி, வேதபுரி எனும் பல பெயர்களால் பெருமைமிக்க கோயிலாக விளங்கும் திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் கோவலில் ஆண்டுதோறும் சித்திரை பெருவிழா நடைபெறும் .

இந்த ஆண்டு ஏப்ரல் 30ஆம் தேதி விக்னேஸ்வர பூஜை கணபதி ஹோமம் ஒரு லிட்டர் பூஜைகள் மே.1-ஆம் தேதி சித்திரை பிரம்மோற்சவ பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
விழாவை முன்னிட்டு சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம் யாக பூஜைகள் மகா தீபாராதனை பின்னர் உற்சவர் சிறப்பு அலங்காரத்தில் கொடிமரத்தடியில் எழுந்தருள கொடி மரத்திற்கு சிறப்பு பூஜைகள் மங்கள மேளம் முழங்க வானவேடிக்கையுடன் கொடிமரம் ஏற்றப்பட்டு பிரம்மோற்சவம் திருவிழா தொடங்கியது.
ஏராளமான பக்தர்கள் கொடியேற்றத்தில் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். இத்திருவிழா மே.1ஆம் தேதி தொடங்கி மே.11ஆம் தேதிவரை நடைபெறுகிறது.

இதில் முக்கிய திருவிழாவாக மூன்றாம் நாள் (மே.3) சனிக்கிழமை 63 நாயன்மார்கள் உற்சவம், ஏழாம் நாள் (மே. 7) பஞ்ச ரத தேர்த்திருவிழா நடைபெறும்.
முதலில் விநாயகர் தேர், தொடர்ந்து முருகர், திரிபுரசுந்தரி அம்பாள் தேர், வேதகிரீஸ்வரர் பெரிய தேர், சண்டிகேஸ்வரர் தேர் என ஐந்து தேர் (பஞ்ச ரதம்) தேர்த் திருவிழா வெகு விமர்சியாக நடைபெறும்.
திருக்கழுக்குன்றம் தாழக்கோயிலான பக்தவச்சலேஸ்வரர் கோவிலைச் சுற்றி திருவிழாக்கடைகள் பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டுள்ளன.
விழா நடைபெறும் ஒவ்வொரு நாட்களும் ஒவ்வொரு வாகனத்தில் சுவாமி புறப்பாடு நடைபெறவிருக்கிறது.
விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் புவியரசு, தக்கார், செயல் அலுவலர் குமரவேல், மேலாளர் விஜயன் உள்ளிட்ட கோவில் பணியாளர்கள் கோவில் சிவாச்சாரியார்கள் திருவிழா உபயோதாரர்கள் செய்து வருகின்றனர்.