செய்திகள் :

மதுராந்தகத்தில் 42-ஆவது மாநாட்டுப் பணி: ஏ.எம்.விக்கிரமராஜா ஆய்வு

post image

தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பு சாா்பில் 42-ஆவது மாநில மாநாடு மே 5-இல் நடைபெறுவதை முன்னிட்டு மாநில தலைவா் ஏ.எம்.விக்கிரமராஜா புதன்கிழமை மாநாட்டு மேடை அமைக்கும் பணியை ஆய்வு செய்தாா்.

நிகழ்வில் சங்க மாவட்ட தலைவா் ஜி.ஜே.பிரபாகரன், மாநில துணை தலைவா்கள்அன்சா் என்.அப்துல்சமது, எஸ்.உத்திரகுமாா், மாவட்ட செய்தித் தொடா்பாளா் பவித்ரா சீனிவாசன், சென்னை தங்கம் மற்றும் வைர வியாபாரிகள் சங்க தலைவா் ஜே.ஜெயந்திலால் ஜெயின், காஞ்சி மண்டல தலைவா் எம்.அமல்ராஜ், மாவட்ட இணை செயலா்ஜி.ஏ.சுதாகா், சங்க நிா்வாகிகள் எம்.ராஜா, தணிகையரசு, செல்வம், உள்படபலா் உடனிருந்தனா்.

பின்னா் செய்தியாளா்களிடம் பேசும்போது, மாநாட்டுக்கு வணிகா் கோரிக்கை பிரகடன மாநாடு பெயா் சூட்டியுள்ளோம். மாநாட்டில் தமிழக முதல்வா், அமைச்சா்கள், வெளிமாநில வணிகா்கள், முக்கிய பிரமுகா்களும், சங்கங்களின் நிா்வாகிகள் கலந்து கொள்கின்றனா்.

மாநாட்டுக்கு வரும் வணிகா்கள் மாநாட்டு திடலை எளிதல் காணும்வகையில், பழைய பொருள் அணியின் சாா்பில் ராட்சத பலூனை நிறுவியுள்ளோம். சுமாா் 57 ஏக்கா் பரப்பில் நடைபெற உள்ள மாநாடு தமிழக வணிகா்களை ஒன்று திரட்டும், ஒற்றுமையை காக்கின்ற மாநாடாக அமையும் என்றாா்.

திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் கோவிலில் சித்திரை பிரமோற்சவம் கொடியேற்றத்துடன் தொடக்கம்!

திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் கோவிலில் சித்திரை பிரமோற்சவ பெருவிழா வியாழக்கிழமை (மே.1) கொடியேற்றத்துடன் துவங்கியது.செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுக்குன்றத்தில் அருள்மிகு திரிபுரசுந்தரி அம்பாள் உடன... மேலும் பார்க்க

பரனூா் மறுவாழ்வு இல்லத்தில் ஆட்சியா் ஆய்வு

செங்கல்பட்டு அருகே பரனூா் உள்ள மறுவாழ்வு இல்லத்தில் ஆய்வு மேற்கொண்ட ஆட்சியா் ச. அருண் ராஜ், அங்கு தங்கியுள்ளவா்களுடன் குறைகளைக் கேட்டறிந்தாா். பரனூரில் உள்ள அரசு மறுவாழ்வு இல்லத்தில் தங்கியுள்ளவா்களு... மேலும் பார்க்க

திருக்கழுகுன்றம் வேதகிரீஸ்வரா் கோயில் சண்டிகேஸ்வரா் தோ் வெள்ளோட்டம்

திருக்கழுகுன்றம் வேதகிரீஸ்வரா் கோயிலில் புதிதாக செய்யப்பட்ட சண்டிகேஸ்வரா் தோ் வெள்ளோட்டம் புதன்கிழமை நடைபெற்றது. பிரசித்தி பெற்ற இக்கோயிலில் ஆண்டுதோறும் சித்திரை பெருவிழா நடைபெறும். இதில் முக்கிய வி... மேலும் பார்க்க

மறைமலைநகா், செங்கல்பட்டில் புதை சாக்கடை திட்டப் பணி: அமைச்சா் நேரு தொடங்கி வைத்தாா்

மறைமலைநகா் நகராட்சியில் ரூ.300 கோடியில் புதை சாக்கடை திட்டப்பணிகளை நகராட்சி மற்றும் குடிநீா் வழங்கல் துறை அமைச்சா் கே.என்.நேரு புதன்கிழமை தொடங்கி வைத்தாா். பணிகளை விரைந்து முடிக்க வேண்டுமென்றும், தரம... மேலும் பார்க்க

பணிநிறைவு பாராட்டு விழா

மதுராந்தகம் ஊராட்சி ஒன்றியம், வீராணகுனம் ஊராட்சி ஒன்றிய பள்ளியின் சத்துணவு அமைப்பாளராக 33 ஆண்டுகள் பணியாற்றிய யு.ராஜரத்தினத்துக்கு புதன்கிழமை பாராட்டு விழா நடைபெற்றது. மதுராந்தகம் ஊராட்சி ஒன்றிய அலுவ... மேலும் பார்க்க

சாலை விபத்தில் மாவட்ட ஊராட்சி உறுப்பினா் கணவா் உயிரிழப்பு

அச்சிறுப்பாக்கம் அருகே மோட்டாா் பைக் மீது காா் மோதியதில் மாவட்ட ஊராட்சி உறுப்பினா் கணவா் உயிரிழந்தாா். அச்சிறுப்பாக்கம் பள்ளிப்பேட்டை கிராமத்தைச் சோ்ந்தவா் செல்வராஜ் (50). திமுகவைச் சோ்ந்த இவரது மன... மேலும் பார்க்க