செய்திகள் :

சித்திரைத் திருவிழா: ஐயாறப்பர் கோயிலில் கொடியேற்றம்!

post image

பிரசித்தி ஐயாறப்பர் கோயில் சித்திரைத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறில் தருமை ஆதீனத்திற்குச் சொந்தமான ஸ்ரீஅறம்வளர்த்த நாயகி அம்மன் உடனாகிய ஐய்யாறப்பர் கோயில் உள்ளது. இந்த கோயிலில் ஆண்டுதோறும் சித்திரைத் திருவிழா வெகு விமர்சையாக நடைபெறும். இந்த ஆண்டு சித்திரை விழா 01-ம் தேதி தொடங்கி 13 -ம் தேதி வரை 13 நாட்கள் நடைபெறும் இந்த விழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.

முன்னதாக கொடிக் கம்பத்திற்குப் பால், சந்தனம் போன்ற திரவிய பொருள்களைக் கொண்டு அபிஷேகம் தீபாராதனை நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பொதுமக்கள் திரளாகக் கலந்து கொண்டனர். விழாவின் முக்கிய நிகழ்வான 05 -ம் தேதி மாலை தன்னைத்தான பூஜித்தல் நடைபெறுகிறது. 6 ஊர்களிலிருந்து சுவாமிகள் கோயிலுக்கு வந்து சன்னதிக்கு முன் சைவர்களுக்கு மகேஸ்வர பூஜை நடைபெறுகிறது. 09 -ம் தேதி தேரோட்டம் நடைபெறுகிறது. அன்று காலை ஐயாறப்பர் அறம்வளர்த்த நாயகியுடன் தேரில் அமர்ந்து பஞ்ச மூர்த்திகளுடன் திருவையாறு நான்கு வீதிகளிலும் தேரோட்டம் நடைபெறுகிறது.

அதைத்தொடர்ந்து 12 -ம் தேதி முக்கிய திருநாளான சப்தஸ்தான பெருவிழா காலை ஐயாறப்பர் அறம்வளர்த்த நாயகியுடன் கண்ணாடி பல்லக்கிலும், நந்திகேஸ்வர் சுயசாம்பிகiயுடன் வெட்டிவேர் பல்லக்கில் புறப்பட்டு திருப்பழனம், திருசோற்றுத்துறை, திருவேதிகுடி, திருக்கண்டியூர், திருப்பூந்துருத்தி, சென்று அன்று இரவு காவிரி ஆற்றில் 6 ஊர் பல்லக்குகளும் தில்லைஸ்தானத்தில் சங்கமிக்கிறது. அன்று இரவு தில்லைஸ்தானம் காவிரி ஆற்றில் வானவேடிக்கை நடைபெறுகிறது.

மறுநாள் 13 -ம் தேதி தில்லைஸ்தானம் பல்லக்குடன் 7 ஊர் பல்லக்குகளும் திருவையாறு வீதிகளில் உலா வந்து தேரடியில் பொம்மை பூ போடும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. பொம்மை பூ போடும் நிகழ்ச்சி முடிந்தவுடன் 6 ஊர் பல்லக்குகளும் கோயிலுக்குச் சென்று தீபாரதனை முடிந்து அந்தந்த ஊர்களுக்குப் புறப்பட்டுச் செல்லும். விழா ஏற்பாடுகளை தருமபுர ஆதீன 27வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த சுவாமிகள் தலைமையில் கோவில் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்/

வெற்றிப் பாதைக்குத் திரும்பினாரா சூர்யா? ரெட்ரோ - திரை விமர்சனம்!

நடிகர் சூர்யா நடித்த ரெட்ரோ திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. தூத்துக்குடியில் ரௌடியாக இருக்கும் திலகன் (ஜோஜூ ஜார்ஜ்) தன் மகன் பாரிவேல் கண்ணனுடன் (சூர்யா) இணைந்து தன் சாம்ராஜ்யத்தை பலம... மேலும் பார்க்க

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதி: சமனில் முடிந்த பார்சிலோனா - இன்டர் மிலன்!

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் மோதிய பார்சிலோனா - இன்டர் மிலன் ஆட்டம் சமனில் முடிந்தது.ஐரோப்பிய கண்டத்தில் நடைபெற்றுவரும் சாம்பியன்ஸ் லீக் முதல் கட்ட அரையிறுதிப் போட்டியில் பார்சிலோனா அணியும் இன்டர் ம... மேலும் பார்க்க

மே மாதப் பலன்கள்: 12 ராசிகளுக்கும்!

தினமணி ஜோதிடர் பெருங்குளம் ராமகிருஷ்ணன் மே மாதப் பலன்களைத் துல்லியமாக நமக்குக் கணித்து வழங்கியுள்ளார். படித்துப் பயன் பெறுங்கள்.மேஷம் (அஸ்வினி, பரணி, கார்த்திகை 1ம் பாதம்)கிரகநிலை:ராசியில் சூர்யன், பு... மேலும் பார்க்க

அருணஜடேசுவரர் கோயிலில் சித்திரை பெருவிழா கொடியேற்றம்!

பிரசித்தி பெற்ற திருப்பனந்தாள் ஸ்ரீ பெரியநாயகி அம்பாள் உடனாகிய ஸ்ரீ அருணஜடேசுவரர் திருக்கோயிலில் சித்திரை பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே திருவிடைமருதூர் தாலுக... மேலும் பார்க்க

‘தோர்’ நாயகனின் புதிய படம் அறிவிப்பு!

‘தோர்’ பட நாயகனானின் புதிய படம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.ஹாலிவுட்டில் சூப்பர் ஹீரோ திரைப்படங்கள் என்றாலே முதலில் நினைவுக்கு வரும் சில படங்களில் ‘அவெஞ்சர்ஸ்’-ம் ஒன்று. அனைத்து சூப்பர் ஹீரோக்க... மேலும் பார்க்க

மாமன் பட டிரைலர்!

நடிகர் சூரி நடிப்பில் உருவாகியுள்ள மாமன் படத்தின் டிரைலர் வெளியானது. நடிகர் சூரி விடுதலை, கருடன், கொட்டுக்காளி படங்களைத் தொடர்ந்து விலங்கு இணையத் தொடர் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் பிரசாந்த் பாண்டியரா... மேலும் பார்க்க