ரசவாதிக்கு 3 விருதுகள்! சிறந்த நடிகர் விருது பெறும் அர்ஜுன்தாஸ்!
ஒரே நாளில் ரூ. 272 கோடி வருவாய்! - பத்திரப் பதிவுத் துறை தகவல்
பத்திரப் பதிவில் நேற்று (ஏப்.30) ஒரேநாளில் ரூ. 272 கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளதாகத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுபமுகூர்த்த முக்கிய நாள்களில் தமிழக பத்திரப் பதிவுத் துறை சார்பில் கூடுதல் டோக்கன்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
அந்தவகையில் அட்சய திருதியை நாளான நேற்று(ஏப்.30) அனைத்து சார்பதிவாளர் அலுவலங்களிளும் கூடுதல் டோக்கன்கள் வழங்கப்பட்ட நிலையில் நேற்று மட்டும் 27,440 ஆவணங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
அதன்படி, இதுவரை இல்லாத அளவாக நேற்று (ஏப். 30) ஒரே நாளில் ரூ. 272.87 கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளதாக பதிவுத் துறை தகவல் தெரிவித்துள்ளது.
முன்னதாக கடந்த பிப்ரவரி 10-ல் ரூ. 237 கோடி வருவாய் ஈட்டியது அதிகபட்சமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.