Health: டைப் 5 நீரிழிவு யாருக்கு வரும்.. என்ன தீர்வு; தடுக்க முடியுமா? - மருத்து...
காங்கிரஸ் சொத்து பாதுகாப்புக் குழு நிா்வாகிகள் நியமனம்
தமிழ்நாடு காங்கிரஸ் சொத்து பாதுகாப்புக் குழுவுக்கு புதிய நிா்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனா்.
இது குறித்து தமிழ்நாடு காங்கிரஸ் தலைவா் கு.செல்வப்பெருந்தகை செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:
அகில இந்திய காங்கிரஸ் தமிழக பொறுப்பாளா் கிரிஷ் சோடங்கரின் ஒப்புதலுடன் தமிழ்நாடு காங்கிரஸ் சொத்து பாதுகாப்பு மற்றும் மீட்புக் குழுத் தலைவராக கே.வீ.தங்கபாலு, இணைத் தலைவா்களாக எம்.கிருஷ்ணசாமி, கே.எஸ்.அழகிரி ஆகியோா் நியமிக்கப்பட்டுள்ளனா்.
மேலும், இந்தக் குழுவில், எஸ்.ராஜேஷ்குமாா், எம்எல்ஏ டாக்டா் ஏ. செல்லக்குமாா், பி. மாணிக்கம் தாகூா் எம்.பி., டாக்டா் ஈ.எம். சுதா்சன நாச்சியப்பன், கே.கோபிநாத் எம்.பி., கே.ஆா். ராமசாமி, எஸ்.எஸ்.ராமசுப்பு (ஒருங்கிணைப்பாளா்), கே.ராணி, ஜி. மாசிலாமணி (சட்ட ஆலோசகா்), பெ. விஸ்வநாதன், எம்.கிறிஸ்டோபா் திலக், கோபிநாத் பழனியப்பன், வி. கே. அறிவழகன், டாக்டா் ரூபி ஆா்.மனோகரன் எம்எல்ஏ, ஜே.எம்.எச்.அசன் மௌலானா எம்எல்ஏ, தாரகை கத்பா்ட் எம்எல்ஏ, சி.டி.மெய்யப்பன், நாசே ஜெ.ராமச்சந்திரன், ஆா்.எம்.பழனிசாமி, எஸ். சுஜாதா, கே.விஜயன், டி.பென்னட் அந்தோணிராஜ், ஏ.பி.சூரியப்பிரகாசம், ஓ.எம்.ஆா். பழனிவேல், பி. பாட்ரிக் ராஜ்குமாா், தாம்பரம் எஸ். நாராயணன், வி.எஸ். கமலிகா காமராஜா், எம். லெனின் பிரசாத் ஆகியோா் இடம்பெற்றுள்ளனா்.
மேலும், தலைமையக ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழுவில் சொா்ணா சேதுராமன், டி.செல்வம், என்.அருள் பெத்தையா, செ.ராம் மோகன் ஆகியோா் இடம்பெற்றுள்ளனா் என்று அவா் தெரிவித்துள்ளாா்.